Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Saturday, May 19, 2012

பிள்ளையின் வளர்ச்சியையும் விருத்தியையும் பாதிக்கும் இரு பிரதான காரணிகனை உதாரணங்களுடன் சுருக்கமாக விளக்குக.

1.            பரம்பரையும் சூழலும்
2.            முதிர்ச்சியும் கற்றலும்

ஒரு குழந்தை பிறக்கும் போது பெற்றாரிடமிருந்து பெறுகின்ற இயல்புகளை பரம்பரைக் காரணிகள் எனக்குறிப்பிடலாம். இந்த காரணிகள் அவரது முழுவாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாகவூம் இருக்கின்றனஉதாரணமாக
1.            தனிப்பட்டவர்களின் உடல் இலட்சனங்கள்:
இது தோலின் நிறம் கணிகளின் நிறம் மற்றும் உயரம் போன்ற வற்றைத் தீர்மானிக்கின்றன. இதனால்  தான் எமக்கு சிலரைக் காணும்போதே இவர் இந்த மனிதருடைய பிள்ளை அல்லது இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட முடிகின்றது.
2.            விஷேட ஆற்றல்கள்:
இந்கு நுண்ணறிவு, விவேகம் போன்றவற்றை குறிப்பிட முடியூம். இந்த  விஷேட  ஆற்றல்கள் குற்றக் செயல்களுக்கும் காரணமாகின்றன என்று இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த கோரிங் என்பவர் ஆய்வு செய்து குறிப்பிடுகின்றார்.
3.            உடல் நோய்கள்:
இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் தோல் நோய்கள் போன்ற பரம்பரைகாணிகளினால் ஏற்படுகின்றன.
4.            குறைபாடுகளும் அங்கவீனங்களும்:
சில அறிஞர்கள் குறிப்பிடும் போது வாக்குக்கண், கூடுதலான விரல்கள் மற்றும் உறுப்புக்கள் கடையாக அல்லது நீளமாக வளர்ந்த காணப்படுவதனையும் குறிப்பிடுவர்.
சூழல்காரணிகள்
                பிள்ளையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பிறப்பிற்கு முன்னராக பின்னரான காரணிகள் தாக்கம் செலுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர். இங்கு தாயின் மனவெழுச்சி நிலை, போசாக்கு நிலை என்பவற்றுடன்,

1.            வீட்டுடன் தொடர்புடைய காரணிகள்:
பெற்ரது கல்வியறிவு, ஒழுக்கம், அன்பு மற்றும் ஒத்துழைப்பு போன்றனவும்
2.            பாடசாலையுடன் தொடர்புடைய காரணிகள்:
தூரப் பிரதேச பாடசாலைஇ வித்தியாசமான நன்பர்கள்இ புதிய விடயஙூகள், பாரபட்சம் மற்றும் ஓய்வு  நேரத்தை பிரயோசனமாக்க கழிக்க வசதிகள் இன்மை போன்ற காரணிகளைக் குறிப்பிட முடியும்.
3.            சமூகத்துடன் தொடர்புடைய காரணிகள்:
அநீதி, ஊழல், ஒற்றுமையின்மை, இன சாதி பேதங்கள், ஏற்றத்தாழ்வு  மற்றும் மனமுறிவு  போன்ற காரணிகள் வளர்ச்சியிலும் விருத்தியிலும் தாக்கம் செலுத்துகின்றன.

முதிர்ச்சி
உடலுறுக்குக்களில் ஏற்படும் மாற்றததையே நாம் முதிர்ச்சி என்கின்றௌம். ஊளவியளாளர் நடத்தையில் ஏற்படும் மாற்றம் என்று குறிப்பிடுகின்றனர். ஒரு குழந்தை சிரித்தல், தவழுதல், நடத்தை மற்றம் பல் முளைத்தல் என்பன முதிர்ச்சியின் அடையாளங்களாகும்.

ற்றல்
கற்றலானது சூழலில் காணப்படுகின்ற பொருட்கள், உயிரினங்கள் போன்ற இன்ன பலவற்றிலிருந்தும். புலன் உறுப்புக்க@டாக காண்பவை, கேற்பவை, உணர்பவை மற்றும் மணப்பவை போன்ற வற்றினாலும். மூத்தோர்களின் ஏறுதல், பாய்தல், ஓடுதல் மற்றும் நடந்து கொள்ளும் முறை போன்ற முன்மாதிரிகளினூடக என்று பலதரப்பட்ட முறைகளினூடாக குழந்தைகள் கற்கின்றனர்.

உசாத்துணைகள்:

  1.      பாரம்பரையும் சூழலும் - தேசிய கல்வி நிறுவகம் - 1991
  2.      கல்வியியல் கட்டுரைகள் - தேசிய கல்வி நிறுவகம் -2005
  3.      முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
  4.      வெண்மேகம் இணையத்தளம்

No comments:

Post a Comment