Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Saturday, May 19, 2012

மாணவர்களின் சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சாதகமான சுற்றாடல் நிலைமைகளை ஆராய்க.


மாணவர்களைப் பொருத்தவரை அவர்கள் பிள்ளைப்பருவம் மற்றும் கட்டிளமைப் பருவங்களுக்கு இடைப்பட்டவர்களா உள்ளனர். இத்தகைய இவர்களிடத்தில் பல்வேறு காரணிகள் சாதகமான மற்றும் பாதகமான தக்கங்களை எற்படுத்துகின்றன. இதற்கமைய சமூகம்சார் நடத்தை விருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சுழற்காரணிகளை அவதானிப்போமாயின்,

1.            பெற்றார்கள்
2.            முத்த சகோதர சகோதரிகள்
3.            சமவயதுக் குழுவினர்
4.            பாடசாலை
5.            சமயஇ சமூக நிறுவனங்கள்
6.            தனியார் கல்வி நிறுவனங்கள்இ வகுப்புக்கள்
7.            ஊடகங்களும் ஓய்வூ நேரங்களும்

ஒரு பிள்ளையின் ஆரம்ப செரல்வாக்குச் செலுத்தும் நிறுவனமாக குடும்பம் காணப்படுகின்றது. அங்கு பெற்றார்கள் மிகவூம் முக்கியமானவர்கள். அவர்களிடம் இருந்து குழந்தை ஆரம் கல்வியைப் பெற்றுக் கொள்கின்றது. அதன்போது பெற்றௌரது ஒத்துழைப்புக்கள் மிகுந்த தாக்கத்தைச் செலுத்துகின்றது. அடுத்தவர்களுக்கு உதவிசெய்யூம் மனப்பான்மையை பிள்ளைகள் வளர்த்துக் கொள்கிறார்கள். குடும்ப அங்கத்தவர்களிடம காணப்படும் அந்நியோன்யமான உறவூ காரணமாக குழந்தை அதனை தனது வாழ்வில் கடைபிடித்துக் கொள்கின்துடன். வளர்ந்துவிட்ட நிலையிலும் அக்குழந்தை சமூகத்தில் அடுத்தவரகளுடன் ஒற்றுமையாகவூம், உதவிகள் செய்தும்இ மற்றவர்களின் சுக துக்கங்களில் பங்குகொண்டும் இருப்பதற்கு இது காரணமாகின்றது.

                அடுத்து இங்கு காணப்படும் பாதுகாப்பு உணர்வூஇ ஒருவரை ஒருவர் பரிவூடன் நோக்கி அவர்களுக்கு எந்த ஆபத்துக்களும் வராமல் பாதுகாப்பார்கள். இந்த நிலையில் இதனை அவதானிக்கும் குழந்தை தன்னிடமும் இந்த பண்பை வளர்த்துக் கொள்கின்றது. அத்துடன் பெற்றார்கள் தங்களுக்கிடையில் நல்ல வார்த்தகளை பயன்படுத்தி கதைத்துக் கொள்ளும் பேHது அதனையே பிள்ளையூம் கைக் கொள்கின்றது. அது சிறந்த மொழிவளத்துக்கும் அடுத்தவர்கள் தன்னை நல்ல பிள்ளை என்று போற்றுவதற்கும் காரணமாகின்றது. ஒருவரது பேச்சைக் கொண்டு அவரை மட்டிடக்கூடிய நிலையில் சிறந்த பேச்சுவழக்கும் இருக்கும் போது அப்பிள்ளை சென்ற இடங்களிலும் தீய வார்த்தைகளை வெறுத்து நல்ல வார்த்தைகளை பயன்படுத்தவூம் இது காரணமாகின்றது.

                குழந்தைப்பருவம் முன்பிள்ளைப் பருவம் என்பன புலக்காட்சி வளர்ச்சிப் படியில் வேகமாக அபிவிருத்தி அடையூம் காலம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். இந்த அடிப்படையில் குழந்தையின் வாழ்வில் நுண்மதி விருத்தி சம்பந்தமா அடிப்படை எண்ணக்கரு குடும்பத்தில் தான் உருவாகின்றது. குறிப்பாக இங்கு கவனிக்கப்படவேண்டிய முக்கயமான விடயம் தனது மூத்த சகோதர சகோதரிகளிமிருந்து உடலை சுத்தமாக வைத்திருக்க குளித்தல்இ போசனையன உணவூ பயன்பாடுஇ நித்திரை மற்றும் கழிவூப் பொருள் அகற்றுதல் போன்ற இன்னோரன்ன விடயங்களை பிள்ளை தனது குடும்பத்தில் இருந்த கற்றுக கொள்கின்றது.

                அடுத்து சமவயது குழுக்களுடைய தொடர்புகளினால் குடும்பத்தினால் கிடைக்காத பல விடயங்கள் கிடைக்கப் பெறுகின்றன. குறிப்பாக எதிர்பாலாரிடம் நடந்து கொள்வேண்டி கண்ணியமா முறை குறித்த அறிவைப் பெற்றுக் கொள்கிறார்கள். தனக்கு பொருத்தமான உடை அணிகலன்கள் யாது? எப்படி அமைத்துக் கொள்வது போன்ற விடயங்களை பிள்ளை அறிந்து கொள்கின்றது. இதன் போது அவர்கள் தனது மூத்த சகோதரர்களை பின்பற்றி தன்னை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்திக் கொள்கின்றனர். சமவயதுக் குழுக்களுடன் பழகும்போது இன்னுமொரு முக்கியமான செயற்பாடு புது சமூகத்துக்கான பாத்திரங்களையூம், குணநல் இயல்புகளையூம் பக்குவதாகும். இதன்மூலம் நல்ல பண்புகளை அடுத்தவர்களுக்குக் கடத்துவதுடன் அடுத்தவரிடமிருந்த நல்ல பண்புகளை கைக்கொள்ளவூம் முடியூமாகும். அத்துடன் ஒத்தவயதுக்குழு மூலம் கிடைக்கும் உதவி புதிய வலுவை உருவாக்கும். இதனால் மூத்தவர்களுடனான கொடுக்கள் வாங்கள்களின்போது முன்னரைவிடவூம் சுதந்திரமாகவூம், வலுவாகவூம் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிமாவதுடன், சுயகற்கை, சுய வலு, தன்னைப்பற்றிய தௌpவூ, நம்பிக்கை என்பன வளர்வதற்கு ஏதவாகின்றது.

                பாடசாலை மாணவர்களின் சமூகம்சார் செயற்பாடுகளில் கூடுதல் பங்கு வகிக்கின்றது. இங்கிருந்துதான் மூத்த பரம்பறையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவூச் செல்வங்கள் இளைய தலைமுறைக்கு கடத்தப்படக் கூடிய இடமாகும். ஒருவன் ஒரு சூழலில் வாழ்வதாயின் அந்த சூழலின் தன்மைகள் பண்பாடுகள் அவனிடம் காணப்படவேண்டும் அப்படி இல்லாவிட்டால் அவனை அந்த சமூகம் ஏற்காது எனவே மாணவன் நாளை அவன் சமூகப்பிரானியாக வாழ்வதற்கு பாடசாலையின் மூத்த பரம்பறையின் வழிகாட்டல்கள் மிகவூம் முக்கியம் பெறுகின்றது. இங்குதான் சமூக மனப்பாங்குளும்இ வாழ்க்கைத் திறன்களும் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
அவ்வாறே நல்ல பழக்க வழக்கங்களை பாடசாலை எற்படுத்துகின்றது. மாணவர்கள் வகுப்பறையைச் சுத்தம் செய்கிறார்கள்இ தினமும் பாடசாலை வளவை சுத்தம் செய்கிறார்கள். இதன்போது அவர்களிடம் பொதுச் சொத்துக்கள் குறித்த பெறுமதி வளர்கின்றதுடன் அவற்றை பாதுகாத்து இளைய தலைமுறையின்ருக்கு கொடுக்க வேண்டும் என்று மனோநிலை ஏற்படுகின்றது. அத்துடன் உயர்ந்த தாழ்ந்தஇ வசதியான வசதி குறைந்த பல மாணவர்களை ஒரு மாணவன் சந்திக் நேருகின்றான் அதன் போது தாழ்வான மாணவனை அல்லது வசதி குறைவான மாணவனை ஒதுக்கிவைக்காது சேர்ந்து நடக்கின்றனர். அவனுடன் ஒன்றான் இருந்து உணவூ உண்கின்றனர். அடுத்த மாணவன் பசியோடு இருக்கும்போது தான்மட்டும் உண்ணாமல் அவர்களையூம் சேர்த்துக் கொள்கின்றனர். இத்தகை பல நல்ல அம்சங்களை பாடசாலை ஒருவனுக்கு கொடுக்கின்றது.

சமய, சமூக நிறுவனங்களை அடுத்த மாணவனிடம் சதாகமான விளைவூகளை ஏற்படுத்தும் இடங்கலாகும். இந்த நிறுவனங்களுடன் மாணவர்கள் அதிகம் தொடர்பு வைக்கின்றனர். இங்கு நல்ல விடயங்கள் போதிக்கப்படுகின்றன. ஒரு மனிதனை நல்ல பண்பாடுகள் உடையவனாக மாற்றுவதில் இந்த நிறுவனங்களுக்கு மிகுந்த பங்கு இருக்கின்றது. ஏனெனில் இவை மனிதனது நம்பிக்கையூடன் இனைந்து செல்லக்கூடியவை. அங்கு கற்பிக்கப்படும் விடயங்களை மாணவர்கள் தனது வாழ்க்கையில் கடைபிடிக்கின்றார்கள். சமூக சேவைகள் ஏற்பாடு செய்ப்படுகின்றன அங்கு பெரியவர்கள் தமது நேரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு ஊதியம் எதுவூம் இன்றி தமது சிரமத்தை தானம் செய்கின்றனர். இதனை அப்படியே பின்பற்றும் இளைய தலைமுறை அல்லது மாணவர்கள் அவர்களும் இத்தகைய செயற்பHடுகளில் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்றனர். இதனால் அவர்களிடையே பொது நோக்குஇ தன்னைப்போல் அடுத்தவரையூம் பார்க்கும் பரந்த மனப்பாங்கு வயர்ச்சியடைகின்றது.

இந்த நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் மாணவர்களிடைய அடுத்தவரை மதித்தல், பொறுமை, ஒழுங்கமைக்கும் சக்தி மற்றும் தலைமைவகிக்கும் தன்மை, அடுத்தவர்களுடன் ஒத்துப்போகுதல் போன்ற பல நல்ல பண்புகள் மாணவர்களுள் குடிகொள்வதற்கு காரணமாகின்றது.

தனியார் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை இன்னொரு மக்கிய சமூக அங்கமாக அது காணப்படுகின்றது. அங்கு மாணவர்கள் பல பிரதேசங்களில் இருந்தும் பல சமூக சூழ்நிலைகளில் இருந்தும் வருகைதருகின்றனர். இந்த நிறுவனங்கள் மாணவர்களிடையே போட்டித் தன்மையை வளர்க்கின்றது. இதன் மூலம் கல்வியில் ஆர்வம் செலுத்தும் தன்மை அதிகரிக்கின்றதுடன். மாணவர்கள் பாடசாலைக்கு மேலதிகமாக கல்வியைப் பெற்று தனது அறிவூ நிலையை விருத்தி செய்து கொள்கின்ற இடமாகவூம் இது காணப்படுகின்றது. மாணவர்களிடையே பல வித்தியாசமான நடையூடை, பழக்கவழக்கங்கள், பேச்சு, உணவூகள் ஏற்பட இது காரணமாகின்து. இதனால் மாணவரகளுக்கு அடுத்தவர்களது தன்மைகளை புரிந்து கொள்வதற்கும்இ வித்தியாசங்களை அனுசரித்து நடந்து கொள்வதற்கும் முக்கிய சந்தர்ப்பமாகின்றது. இந்த நிறுவனங்களுக்கு அதிகமாக வருபவர்கள் மத்திய வகுப்பினராக இருப்பதனால் மத்திய வகுப்பினரது சமூக இயல்புகள் பரவூவதற்கும் காரணமாகின்றது. பாடசாலைகளில் அடங்கியிருப்பதனால் தனது இயல்புகளை வெளிக்காட்ட முடியாதவர்கள் துணிந்த செயற்படவூம் குழுக்களுக்கு தலைமை தாங்கவூம் சந்தர்ப்பம் அமைகின்றது.

மாணவர்கள் தமது ஓய்வூ நேரங்களை இன்பமாகக் கழிப்பதில் கூடிய கவனம் செலுத்துவார்கள். இதன்போது அவர்கள் இணையம், தொலைக்காட்சி பார்த்தல், விளையாடுதல், பத்திரிகை போன்ற விடயங்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் கணினி, தொலைக்காட்சி போன்ற வற்றில் அவர்கள் அதிகநேரத்தை செலவிடுகின்றர். அதில் காட்சிப்படுத்தப்படுபவற்றை அவர்கள் பின்பற்றுகின்றனர். இதன் மூலம் சர்வதேச கலாசாரங்களை அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். மாற்றமுறும் உலக நிலைகளை அறிந்து அதற்கேற்ப தன்னை தயார்செய்து கொள்ளக்கூடியவர்களாக மாறுகிறனர். இணையத்தின் மூலம் பலருடன் தொடர்பு கொள்ளக்கூடிய வசதி ஏற்படுகின்றது. புதிய அறிவூகளை உடனுக்குடன் அறிந்து அதனை பிரயோகிக்க கற்றுக் கொள்கிறார்கள். தனது கருத்துக்களை பயமினிறி தெரிவிக்கக் கூடிய இடமாக இணையம் இன்று காணப்படுகின்றது. பல நல்ல நபர்களுடைய நேரடி உறவினால் மாணவர்கள் தனது மனப்பாங்குகளை சிறந்த முறையில் அமைத்துக் கொள்வதற்கு வழிஏற்படுகின்றது. அத்தகைய முன்மாதிரிகளை தானும் பின்னபற்றி எதிர்காலத்தில் அத்தகைய பிரபலங்களாக, உலகுக்குப் பிரயோசனம் உடையவர்களாக அவர்களும் தங்களை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யக்கூடியவர்களாக மாறுவார்கள். பத்திரகை சஞ்சிககையைப பொறுத்தரையூம் இதே நிலைப்பாடுகளுக்கு மாணர்கள் வருவார்கள். அங்கு அவர்களிடம் வாசிப்புத்துறை வளர்வதற்கும் பாத்திரிகைகளுக்கு எழுதுவதன் மூலம் எழுத்துத்துறை வளர்ச்சியடைவதோடு அறிவூம் வளர்வதற்கு அது காரணமாகின்றது.

விகொட்ஸ்கியின் கொள்கைக் கேற்ப பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தியில் ஆசிரியரின் வகிபங்கு யாது?


இவரைப் பொருத்தவரை ஒரு பிள்ளையினது அறிவாற்றல் விருத்தியில் பெற்றார்கள், பெரியவர்கள், சமவயதினர் போன்றௌரில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பினார் ஏற்படும் இடைத்தாக்கத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுகின்றார்.

இது குறித்து விகொட்ஸ்கி குறிப்பிடும் போது "பிள்ளையானது தான் அன்றாடம் காணும் கருத்துக்கள் நிகழ்வூகளினால் தனக்குறிய எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்கின்றது" ஏன்வே அங்கு அந்த குழந்தை காணும் அனுபவிக்கும நிகழ்வூ நல்லதாக இருப்பின் நல்ல எண்ணக்கருக்களும் தீயதாக இருப்பின் தீய எண்ணக்கருக்களும் ஏற்படுகின்றன. எனவே பாடசாலையைப் பொருத்தவரை ஆசிரியர்கள் முக்கியமான பாத்திரமாக இருக்கின்றனர். ஆவர்களை பிள்ளைகள் பின்பற்றுகிறனர்.

அதேவேலை தான் பாடசாலையில் காணும் பெரியவர்களான ஆசிரியர்கள் பற்றிய உணர்வூகளை வளர்த்துக் கொள்கின்றனர். இது நாளடைவில் நடத்தையாக மாறுகின்றது. ஆரம்பத்தில் பிள்ளைகளிடம் குழு செயற்;பாடுகளில் ஈடுபடும் மன ஊக்கள் காணப்படுவதில்லை. எனினும் ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பினால் அந்த தாக்கத்தைப் பெறுகின்றனர்.

ஆசிரியரின் வகிபங்கு பற்றி கூறும் விகொட்ஸ்கி பிள்ளைகளிடம் அண்மித்த அபிவிருத்தி வளயம் ஒன்று இருப்பதாக்கவூம் மேலும் கூறும்போது அங்கு பிள்ளை பல திறன்களையூம் திறமைகளையூம் வைத்திருக்கின்றது எனினும் அதனை பெற்று தனது வாழ்வில் பயன்படுத்துவது பெரியவர்களின் உதவியின் மூலமே என்கின்றார். இங்கு அன்மித்த அபிவிருத்தி வலயம் என்பது பிள்ளை தானே சுயமான இருந்து தனது ஒரு பிரச்சினைக்கு தீர்வைக்காணுவதைவிடவூம் இன்னொருவர்மூலம் உதவியைப் பெற்று காண்பதுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

எனவே ஆசிரியரானவர் இங்கு முக்கிய இடம் பெறுகின்றார். பிள்ளை ஒரு ஆசிரியரின் மூலம் அதனை பெற முயல்வது சாதாரன ஒருவரிடம் இருந்து பெறுவதனை விடவூம் அங்கு பாரிய முன்னேற்றமும்இ விருத்தியூம் காணப்படுவதனை காணலாம். அதுவூம் பாடசாலையில் அந்த நிலையில் ஆசிரியரின் வகிபங்கு மிக முக்கியமானதாகும்.

உசாத்துணை
  கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

பியாஜேயினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிள்ளைகளின் அறிகைசார் விருத்தியைப் பாதிக்கும் மூன்று காரணிகளை விளக்குக.


அறிவூசார் விருத்தி என்பது ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது வளர்ச்சியில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களுக்கு ஏற்ப உலகம் பற்றிய புலக்காட்சி பரந்தாகவூம் பொதுமையாக்கம் பெற்றதாகவூம் அமைதல்எனக்குறிப்பிடுகின்றார். புpன்னர் இது உயிரியின் புறச்சூழலின் இடைத்தாக்கச் செயல்களினூடாக தன்மயமாக்கப்பட்டு சிக்கல் நிறைந்ததாக மாறுகின்றது. இந்த அறிவூசார் செயல்களில் ஏற்படும் மாற்றங்களாக,

முதிர்ச்சி:
முதிர்ச்சி என்று அழைக்கக் கூடிய குறிப்பிடத்தக்க உடலியல் வளர்ச்சியே அனைத்துவிதமான விருத்தியோடு தொடர்புடைய மாற்றங்களுக்குத் தேவையான உயிரியல் அடிப்படைகளை வழங்குகின்றது. குழந்தை நிலையில் இருந்த அந்த உயிர் படிப்படியாக வளரும் போது தன்னில் பல மாற்றங்களை கொண்டுவருகின்றது. அதன போது குழந்தை நாளடைவில் நடக்கக் கற்றுக் கொள்கின்றது நடத்தல் மூலம் ஒரு விடயத்தை அவசரமாக செய்து கொள்ள முடியாது என்று காணும் குழந்தை ஓடக் கற்றுக் கொள்கின்றது.

செயற்பாடு:
குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் எப்போதும் அதிகமாக செயற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள். இதனால் தான் அவர்கள் அதிகமான விடயங்களை குறுகிய காலத்தில் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர்களை பொருத்தவரை அவர்கள் புதிய விடயங்களில் அல்லது புதிய உபகரணங்களை கையால்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஆனால் குழந்தைகள் அந்த விடயங்களில் கூடுதலான ஈடுபாடு காட்டுவதால் அவர்கள் நவீனத்துவத்துடன் வேகமாக இணைந்து கொள்கின்றதனை காணலாம்.

சமூக ஊடுகடத்தல்:
குழந்தை பல சந்தர்ப்பங்களில் பலருடன் தொடர்புகொள்கின்றனர் அதன்போது பல்வேறுவகையான சமூக கலாசார விழுமியங்கள் பற்றிய விளக்கத்தை விரிவூபடுத்திக் கொள்வதை காணமுடியூமாகும். குழந்தை பல நவீன விடயங்களை தன்னுள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். தனது உடையமைப்பை மாற்றிக் கொள்கின்றது. தனது நடையூடைகளையூம் மாற்றி அமைத்துக் கொள்கின்றதனை காண்கின்றௌம்.

உசாத்துணைகள்:
      1.    கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

       2.   முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
       3.   வெண்மேகம் இணையத்தளம்