Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Friday, November 9, 2012

சமூகமயமாக்கல் செயன்முறையின் குடும்பத்தின் வகிபாகத்தை நான்கு உதாரணங்களை எடுத்துக் கூறுவதனூடாக விவரிக்குக.


Socialization

குழந்தையை சமூகத்துக்குறிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு சமூகத்துக்குறிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு அப்பிள்ளைக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய அன்பு செலுத்தக்கூடிய, தண்டனை வழங்கக்கூடிய எல்லா சமூக்க குழுக்களும் சமூகமயமாக்கல் கருவிகள் எனப்படும். இவற்றுல் முதன்மையானது குடும்பமாகும். தனியால் ஒருவர் முதலில் அங்கத்துவம் பெறும் நிறுவனம் குடும்பமாகும். பாடசாலை செல்லும் வயது வரை ஒரு பிள்ளை தனது முழு நாளையும் குடும்பத்திலே கழிக்கின்றது. அதனால் இக்காலப்பகுதியில் அப்பிள்ளை குடும்ப அங்கத்தவரின் உறவின் அடிப்படையிலே சமூக இணக்கம் பெறுகின்றது. வேறு எந்த சமூக நிறுவனங்களை விடவும் குடும்பத்தில் நிலவும் உறவு அந்நியோன்யமானதும், நெருங்கியதுமாகும்.

சிறுபிள்ளையொன்று முதன் முதலில் தன்னுடைய மொழியை கற்றுக்கொள்வது குடும்பத்திலாகும். வீட்டில் மூத்தோரது பேச்சுக்களை கேட்கும் அப்பிள்ளை படிப்படியாக அவற்றை உள்வாங்கிக் கொண்டு விளங்கிக் கொள்வதில் முயற்சிசெய்யும். முதலில் சிறிய சொற்கள் மூலம் சொல்வளத்தை ஆரம்பிக்கும் பிள்ளை படிப்படியாக அதனை விருத்திசெய்து கொள்ளும். இக்காலகட்டத்தில் குழந்தையின் சொற்பிரயோகங்கள் அனைத்துமே தன்னைச் சுற்றியுள்ள குடும்பத்தினரைக் கொண்டே அமையும். இவ்வாறு கற்றுக்கொள்ளும் பிள்ளை சமூகத்துக்கு சென்ற நிலையிலும் அந்தக்குழந்தை தான் அங்கு கற்ற வசனங்களையே பயன்படுத்த முற்படுவதனை அவதானிக்கலாம். இதன் போதுதான் நாம் முறண்பட்ட குடும்பங்களில் இருந்துவரும் பிள்ளைகள் தேவையற்ற வசனங்களை பிரயோகிப்பதனையும், அதே நேரம் மகிழ்ச்சியான குடும்பங்களில் இருந்துவரும் குழந்தைகள் நல்ல பன்பாடான சொற்களைப் பிரயோகிப்பதனையும் காணலாம்.
அவ்வாறே பெற்றார் தொழிலுக்குச் செல்லும் வீடுகளில் குழந்தைகள் தனிமையில் கவனிப்பாறற்று விடப்படுகின்றனர். அவர்கள் பாடசாலைவிட்டு வந்ததும் பெற்றார் வரும்வரையில் தனது நன்பர்களுடன் சுற்றித்திரியமுற்படுகின்றனர். இரவுநேரத்தில் மட்டும் பெற்றாரின் பார்வையில் இருக்க மற்றைய நேரங்களில் வழிகாட்டல் இன்றி செயற்படுகின்றனர். இத்தகைய மாணவர்கள் சமூகத்துக்குச் செல்லும் போது யாருடையவும் கட்டளைகளுக்கு செவியாய்க்காத நிலைகாணப்படுவதனை அவதானிக்கலாம். அத்துடன் யாரும் அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதனை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

அதேபோன்று சில குடும்பங்களில் பெற்றார் கடுமையானவர்களாக நடந்து கொள்வார்கள். இந்த சூழலில் வாழும் குழந்தை வளரந்து சமூகத்தில் நடமாடும்போதும் இதன் தாக்கத்தை உணர்வார்கள். குறிப்பாக இவர்களிடையே பயந்த சுபாவம் காணப்படுவதுடன் எந்த ஒருவிடயத்தாலும் விரைவில் தாக்கம் அடையக்கூடியவர்களாக இருப்பதனை அவதானிக்களாம். இவர்கள் அவதானமான வேலைகளின் போது பின்நிற்பதனை அவதானிக்களாம். இவர்களால் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. அதற்கு மிக முக்கிய காரணம் அவர்கள் மனஅழுத்தங்களுக்கு உற்பட்டுள்ளதாகும். இத்தகையவர்கள் பொதுவாக சுயமாக ஒரு இலக்கை உருவாக்கி செயற்பட முடியாதவர்களாக இருப்பார்கள். எப்போதுமே இன்னொருவர் வகுத்துத்தரும் விடயங்களிலே ஈடுபடுவார்கள்.
இதுபோன்று குழந்தைகள் எப்போதும் இன்னொருவரது செயலை பார்த்து பின்பற்றக்கூடியவர்களாவர். வீட்டில் இருக்கும் தாய் தந்தை, சகோதர சகோதரிகள் போன்றௌரை பிள்ளை கூடுதலாகப் பின்பற்றும். இதன்போது தாய்தந்தையர் செயற்பாடுகள் குழந்தைகளின் சமூகசெயற்பாடுகளில் கூடிய தாக்கத்தை விளைவிக்கின்றனர். அவர்கள் இருவரும் நடந்துகொள்ளும் முறையினை அவதானிக்கும் குழந்தை அவன் அல்லது அவள் வளர்ந்ததும் தனது கணவருடன், மனைவியருடன் அதே முறையிலேயே நடந்துகொள்ள முற்படுவர். தாய் தந்தையர் சண்டைசச்சரவில் ஈடுபட்டால் இவர்களும் அந்த நிலைக்கு அவசரமாக சென்றுவிடுவதனை அவதானிக்களாம். இன்று சமூகத்தில் பிரச்சினைக்குறிய குடும்பங்களின் முன்அனுபவங்களை அவதானிக்கும் போது அவரகள் முறன்பாட்டுக்குள்ளானவர்களாக இருந்துள்ளதை அவதானிக்களாம்.

அவ்வாறே தனது சகோதர சகோதரிகள் சிறந்தமுiயில் கல்வியில் ஈடுபடக்கூடியவர்;களாக இருந்தால் அதனை அவதானிக்கும் குழந்தை தானும் கற்றல் உபகரணங்களை கையாள்வதனை அவதானிக்களாம். அல்லது அவர்கள் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களாக இருந்தால் இங்கு வளரும் குழந்தை சிறுவயதிலே களவு, பொய் போன்ற தீயபழக்கங்ளில் ஈடுபடுவதனையும். சமூகத்துக்குச் சென்றதும் மனிதர்களை ஏமாற்றுபவர்களாகவும் நம்பிக்கை மோசடி செய்பவர்களாகவும் மாறிவிடுவதனை காணலாம். அவ்வாறே குழந்தைகள் தனது வயதுக்கு அதிகம் மேம்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்போது அவர்கள் தனது செயற்பாடுகளையும் தனது வயதுக்குறிய நடத்தைகளை விஞ்சி செயற்படுவதனையும் காணலாம்.

உசாத்துணைகள்:
1. முனைவர் கருணாநிதி மா. 2008 – கற்றல் கற்பித்தல் - சேமமடு பதிப்பகம்.
2. முனைவர் ஜயராஜா சபா. 2008 – கல்விச் சமூகவியல் - குடும்பமும் சமூகமயமாக்கலும் கல்வியூம் - சேமமடு பதிக்கம்.
3. கல்வியின் சமூக அடிப்படைகள் - 2009 - இ.தி.பல்.கழகம்