Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Wednesday, July 4, 2012

ஒரு ஆசிரியருக்கு கற்பித்தல் - கற்றல் செயன்முறையின் விளைதிறனை விருத்தி செய்வதில் கற்றல் கொள்கைகளின் பொருத்தப்பாட்டை கலந்துரையாடுக.



ஒரு ஆசிரியருக்கு மிகவூம் பிரதானமாக அமைவது பிள்ளையின் முயற்சியை ஆசிரியருடன் தொழிற்படச் செய்வதாகும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். எனினும் இது சிக்கல் நிறைந்ததாகும். இந்த நிலையில் இந்த சிக்கலைத் தவிர்ப்பதற்கு ஆசிரியர் முன்னதாகவே சில உத்திகளை அறிந்திருக்க வேண்டும். இதனை நாம் கற்றல் கொள்கைகள் என்கின்றௌம். இதில்,

முயன்று தவறல் கொள்கை:

'தோண்டையிக்' என்பவர் இங்கு தூண்டலுக்கு துலங்கலைப் பெற்றுக் கொண்டால் அதனை மீளவூம் பெறுதல் இலகுவானது தூண்டி தான் துலங்கலை ஏற்படுத்துகின்றது. என்கின்றார். இதற்காக அவர் பூனையை அடைத்துவைத்து பரிசோதனையைச் செய்தார்.
இதனை வகுப்புக்களில் கையாளும்போது ஆசிரியர் செரிவானதும் கவர்ச்சியானதுமான முறைகளை தனது பாடத்தின் போது விரிவான முறையில் பயிற்சிகளுடனும், வெகுமதிகளுடனும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்வதால் அந்தச் செயல் உறுதியடைவதற்கும், கற்றுக் கொள்வதற்கும் காரணமாகின்றது. குறிப்பாக கணிதப் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வது மற்றும் மாணவர்களது செய்கைகளுக்கு சரி அடையாளம் இடுவது நன்று மிகநன்று போன்ற மகிழ்ச்சிகரமான துண்டல்களால் சிறப்பாக தூண்டச் செய்யலாம்.

பழைய நிபந்தனைப் பாட்டுக் கொள்கை:

இங்கு 'பவ்லோவ்' தூண்டித் துலங்களை ஏற்படுத்தும் இன்னொரு செயற்பாட்டை அறிமுகம் செய்தார். இக்கொள்கையின் அடிப்;படையில் பிள்ளைகளின் கற்றலுக்கும், நற்பழக்கங்களை ஏற்படுத்துவதற்கும், தீய பழக்கங்களை ஒழிப்பதற்கும் இதனைப் பயன்படுத்தலாம். பாடசாலையில் மணியோசை கேட்டவுடன் மாணவர்கள் தமது செயற்பாடுகளை மாற்றிக் கொள்கின்றனர். ஆசிரியர் தூரத்திலே வருவதைக் காணும் மாணவர்கள் அந்த பாடத்துக்கு ஆயத்தமாகின்றனர். தண்டிப்பதற்கு ஒரு தடிவைத்திருந்தால் போதும் அதைக் காணும் மாணவர்கள் அதற்கு துலங்களைக் காட்டுவார்கள்.

தொழில் நிபந்தனைப்பாட்டுக் கொள்கை:

இது நடத்தை உருவாக்கம், மீளவலியூறுத்தல் என்ற பிரதான இரண்டு அடிப்படைகளைக் கொண்டது. ஒரு கற்றல் செயற்பாட்டை மாணவரிடம் வளர்ச்சி யiடைய வைத்து நலைநிறுத்த வேண்டுமாயின் அச்செயற்பாட்டை புகழ்தல், பாராட்டுதல், வெகுமதியளித்தல் போன்ற மீளவலியூறுத்தல் மூலம் தொடர்ந்து செய்தல் வேண்டும். அதாவது பொருளாதார வசதியுடைய பிள்ளைகளுக்கு புகழ்தல், தட்டிக் கொடுத்தல் போன்றன சிறந்த மீளவலியூறுத்தலாகும். வறுமையான நிலையில் உள்ள பிள்ளைகளுக்கு பரிசு கொடுத்தல் சிறந்த மீளவலியுறுத்தலாகும். அதே போல் தீய செயற்பாடுகளில் ஈடுபடும் பிள்ளைகளை தவிர்ப்பதற்காக அறிவூறை, கண்டிப்பு போன்றனவற்றை தொடர்ச்சியாக செய்துவருவது அவர்களிடையே துலங்கலை ஏற்படுத்தக் கூடியதாகும்.


ஊசாத்துணைகள்:
1. கல்வி உளவியல் - 2010 - இ.தி.பல்.கழகம்
2. கல்வி உளவிளல் அடிப்படைகள் - 1992 – தேசிய கல்வி நிறுவகம்