Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Saturday, May 19, 2012

கட்டிளம் பருவத்தினால் எதிர்கொள்ளப்படும் உளவியல் பிரச்சினைகள் மூன்றினை ஆராய்க.

இப்பருவம் குழந்தைப்பருவத்துக்கும், வளர்ந்தோர் பருவத்துக்கும் இடைப்பட்ட மாறுநிலைப்பருவமாகும். இதனால் சில வேளைகளில் இவ்விரு பருவ இயல்புகளும் ஒருங்கே காணப்படலாம். 12-20 வயது வரையான காலம் இப்பருவத்தினுள் அடங்கும். ஆண், பெண் இரு பாலாரிடமும் உயிரியல் ரீதியிலும் நடத்தை ரீதியிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பருவம் இதுவாகும். இதனால் பல உளவியல் பிரச்சினைகள் தோன்றுகின்றன.

துரித உடல் வளர்ச்சி:
இந்த காலத்தில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக அவர்களிடையே அமைதியின்மை ஏற்படுகின்றன. அத்துடன் இந்த வளர்ச்சி ஆளுக்காள் வித்தியாசமாக அமைவதும் ஒருகாரணமாகும். சிலரது உடல் பருத்து காணப்படும், முகம் மார்பு கமுக்கட்டு பேன்ற வற்றில் மயிர்கள் முலைக்க ஆரம்பித்தல், குரல் விரிவடைந்து குரலில் மாற்றம் எற்படும் இது போன்றவை இவர்களுக்கு ஷ்டத்தை எற்படுத்தும், தனது அனுபவங்களை பகிர்ந்த கொள்ள முடியாத நிலை தோன்றும். இதனை பழக்கப்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும்.

சுதந்திர உணர்வு:
இந்நிலைமைகளில் தீர்மானம் எடுத்தல், சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளைகள், தம்மை சமூகத்தின் முழுமையான உறுப்பினராக நோக்குவர். இப்பருவத்தினரை சமூகம் நோக்கும் முறையூம் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடாக காணப்படுவதால் பிரச்சினைகள் ஏற்படலாம். வளர்ந்தோரின் காட்டுப்பாட்டில் இருந்த நீங்கி நிற்கவே முற்படுவர். இதனால் பெற்றௌரைப் புறக்காணிக்க முற்படடுவர். இந்த நிலையினால் குற்றச் செயல்கள், வன்செயல்களில் ஈடுபட முற்படுவர். ஆவமானங்களை தாங்க மாட்டார்கள் இதனால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடவும் செய்வார்கள்.

கனவு காணுதல்:
எதிர்பால் கவர்ச்சியால் அவர்களுடன் இணைந்த செயலாற்ற ஆர்வம் கொள்வார்கள்இ காதல் வயப்படுவார்கள் தனது திருமணம் குறித்து சிந்திக்க ஆரம்பிப்பார்கள். கல்வியை கற்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்வார்கள் அதேசமயம் பணம் தேட முற்படுவர் அதற்காக தொழில் தொரிவுகளில் நாட்டம் கொள்வார்கள்.

உசாத்துணைகள்:

   1.      முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
   2.     வெண்மேகம் இணையத்தளம்
 3.  கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment