Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Saturday, May 19, 2012

பியாஜேயினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிள்ளைகளின் அறிகைசார் விருத்தியைப் பாதிக்கும் மூன்று காரணிகளை விளக்குக.


அறிவூசார் விருத்தி என்பது ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது வளர்ச்சியில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களுக்கு ஏற்ப உலகம் பற்றிய புலக்காட்சி பரந்தாகவூம் பொதுமையாக்கம் பெற்றதாகவூம் அமைதல்எனக்குறிப்பிடுகின்றார். புpன்னர் இது உயிரியின் புறச்சூழலின் இடைத்தாக்கச் செயல்களினூடாக தன்மயமாக்கப்பட்டு சிக்கல் நிறைந்ததாக மாறுகின்றது. இந்த அறிவூசார் செயல்களில் ஏற்படும் மாற்றங்களாக,

முதிர்ச்சி:
முதிர்ச்சி என்று அழைக்கக் கூடிய குறிப்பிடத்தக்க உடலியல் வளர்ச்சியே அனைத்துவிதமான விருத்தியோடு தொடர்புடைய மாற்றங்களுக்குத் தேவையான உயிரியல் அடிப்படைகளை வழங்குகின்றது. குழந்தை நிலையில் இருந்த அந்த உயிர் படிப்படியாக வளரும் போது தன்னில் பல மாற்றங்களை கொண்டுவருகின்றது. அதன போது குழந்தை நாளடைவில் நடக்கக் கற்றுக் கொள்கின்றது நடத்தல் மூலம் ஒரு விடயத்தை அவசரமாக செய்து கொள்ள முடியாது என்று காணும் குழந்தை ஓடக் கற்றுக் கொள்கின்றது.

செயற்பாடு:
குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் எப்போதும் அதிகமாக செயற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள். இதனால் தான் அவர்கள் அதிகமான விடயங்களை குறுகிய காலத்தில் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர்களை பொருத்தவரை அவர்கள் புதிய விடயங்களில் அல்லது புதிய உபகரணங்களை கையால்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஆனால் குழந்தைகள் அந்த விடயங்களில் கூடுதலான ஈடுபாடு காட்டுவதால் அவர்கள் நவீனத்துவத்துடன் வேகமாக இணைந்து கொள்கின்றதனை காணலாம்.

சமூக ஊடுகடத்தல்:
குழந்தை பல சந்தர்ப்பங்களில் பலருடன் தொடர்புகொள்கின்றனர் அதன்போது பல்வேறுவகையான சமூக கலாசார விழுமியங்கள் பற்றிய விளக்கத்தை விரிவூபடுத்திக் கொள்வதை காணமுடியூமாகும். குழந்தை பல நவீன விடயங்களை தன்னுள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். தனது உடையமைப்பை மாற்றிக் கொள்கின்றது. தனது நடையூடைகளையூம் மாற்றி அமைத்துக் கொள்கின்றதனை காண்கின்றௌம்.

உசாத்துணைகள்:
      1.    கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

       2.   முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
       3.   வெண்மேகம் இணையத்தளம்

No comments:

Post a Comment