Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Saturday, May 19, 2012

விகொட்ஸ்கியின் கொள்கைக் கேற்ப பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தியில் ஆசிரியரின் வகிபங்கு யாது?


இவரைப் பொருத்தவரை ஒரு பிள்ளையினது அறிவாற்றல் விருத்தியில் பெற்றார்கள், பெரியவர்கள், சமவயதினர் போன்றௌரில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பினார் ஏற்படும் இடைத்தாக்கத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுகின்றார்.

இது குறித்து விகொட்ஸ்கி குறிப்பிடும் போது "பிள்ளையானது தான் அன்றாடம் காணும் கருத்துக்கள் நிகழ்வூகளினால் தனக்குறிய எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்கின்றது" ஏன்வே அங்கு அந்த குழந்தை காணும் அனுபவிக்கும நிகழ்வூ நல்லதாக இருப்பின் நல்ல எண்ணக்கருக்களும் தீயதாக இருப்பின் தீய எண்ணக்கருக்களும் ஏற்படுகின்றன. எனவே பாடசாலையைப் பொருத்தவரை ஆசிரியர்கள் முக்கியமான பாத்திரமாக இருக்கின்றனர். ஆவர்களை பிள்ளைகள் பின்பற்றுகிறனர்.

அதேவேலை தான் பாடசாலையில் காணும் பெரியவர்களான ஆசிரியர்கள் பற்றிய உணர்வூகளை வளர்த்துக் கொள்கின்றனர். இது நாளடைவில் நடத்தையாக மாறுகின்றது. ஆரம்பத்தில் பிள்ளைகளிடம் குழு செயற்;பாடுகளில் ஈடுபடும் மன ஊக்கள் காணப்படுவதில்லை. எனினும் ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பினால் அந்த தாக்கத்தைப் பெறுகின்றனர்.

ஆசிரியரின் வகிபங்கு பற்றி கூறும் விகொட்ஸ்கி பிள்ளைகளிடம் அண்மித்த அபிவிருத்தி வளயம் ஒன்று இருப்பதாக்கவூம் மேலும் கூறும்போது அங்கு பிள்ளை பல திறன்களையூம் திறமைகளையூம் வைத்திருக்கின்றது எனினும் அதனை பெற்று தனது வாழ்வில் பயன்படுத்துவது பெரியவர்களின் உதவியின் மூலமே என்கின்றார். இங்கு அன்மித்த அபிவிருத்தி வலயம் என்பது பிள்ளை தானே சுயமான இருந்து தனது ஒரு பிரச்சினைக்கு தீர்வைக்காணுவதைவிடவூம் இன்னொருவர்மூலம் உதவியைப் பெற்று காண்பதுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

எனவே ஆசிரியரானவர் இங்கு முக்கிய இடம் பெறுகின்றார். பிள்ளை ஒரு ஆசிரியரின் மூலம் அதனை பெற முயல்வது சாதாரன ஒருவரிடம் இருந்து பெறுவதனை விடவூம் அங்கு பாரிய முன்னேற்றமும்இ விருத்தியூம் காணப்படுவதனை காணலாம். அதுவூம் பாடசாலையில் அந்த நிலையில் ஆசிரியரின் வகிபங்கு மிக முக்கியமானதாகும்.

உசாத்துணை
  கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

No comments:

Post a Comment