Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Wednesday, December 12, 2012

‘வளர்ச்சிக்கும் விருத்திக்குமான உரிமையானது பிள்ளைகளுக்குறிய உரிமைகளுள் ஒன்றாகும்’

diploma_in_education_Tamil

     இதனை இங்கிருந்து ஆரம்பிக்கலாம் சிலியின் நோபல் பரிசுக்குறிய காரெய்லா மிஸ்ட்ரால் சிறுவர்களின் வளர்ச்சி விருத்தி பற்றி கூறும் கூற்று இதனை மிகவூம் தெளிவாக்க காட்டக் கூடியதாகும். அவர் ‘எமக்குத் தேவைப்படும் பல பொருள்களைத் தாமதிக்கலாம். ஆனால் பிள்ளைகளுக்கு அவ்வாறு நடக்க முடியாது. அப்பிள்ளைகளின் எலும்புகள் உருப்படுகின்றன. குருதி ஆக்கப்படுகின்றது. புலன் உறுப்புக்கள் விருத்தியாகின்றன. இவ்வாறான தகுந்த நேரத்தில் நாளை எனக் காலம் தாழ்த்த முடியாது. அவருடைய நாமம் இன்று’ என்று குறிப்பிடுகின்றதன். ஆழம்தான் என்ன.
சிறுவர் என்ற வயதெல்லையைப் பொருத்தவரை அவர்கள் அனைத்து பகுதிகளினாலும் வளர்ச்சியூம் விருத்தியூம் அடைந்து கொண்டிருப்பவர்கள். ஒரு வளர்ச்சி விருத்தி நடைபெறுகின்றது என்றால் அங்கு அதற்குத் தேவையான அனைத்தும் போதியளவூ கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாத போது அது வளர்ச்சியடையாது அல்லது வளர்ச்சி சரியானதாக இருக்காது.
ஆனாலும் மனிதர்களைப் பொருத்தவரை அவர்கள் உடலால் மட்டும் வளர்ச்சியடைபவர்கள் அல்லர். அதிலும் சிறுவர்களைப் பார்க்கும் போது அவர்கள் மனஎழுச்சி விருத்தி, மொழி விருத்தி, உள இயக்கத் திறன்கள், ஆக்கத் திறன்கள், ஆளுமை, சமூகவிருத்தி என பலகோணங்களிலும் வளர்ச்சியூம் விருத்தியூம் அடைகின்றனர்.
சிறுவர்கள் வளர்ச்சியின் ஆரம்ப ஊற்றுக்கள். இந்த இளங்கன்றுகளின் பூரண விருத்தியின் அத்திவாரம் சுகாதாரமும், உடலியல் விருத்தியூமாகும். எனவே தகுந்த ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்குக் கிடைக்கவேண்டும். அவை அந்ததந்த வளர்ச்சிக்கட்டத்துக்கு தகுந்தாட்போல் போதியளவில் கிடைக்கச் செய்யவேண்டும். அத்துடன் சரியான சுகாதார வசதிகளையூம், சுகாதார பழக்கவழக்கங்களையூம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். இல்லாதபோது அவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய்கள் அவசரமாக தொற்றக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. இவற்றின் மூலம் பிள்ளைகள் அனைவருக்கும் அனைத்து சுகாதார வசதிகளையூம் கிடைக்கச் செய்யவேண்டும்.
அதே போன்று இன்னும் பார்க்கும் போது உடலியல் விருத்திக்கான சவதிகளுடன் பிள்ளையானது தனது அறிவூ, உடலியக்கம், மனவெழுச்சி போன்ற வற்றின் விருத்தியில் உச்ச நிலையை அடைவதற்கு தகுதியான சூழல் வசதிகள் அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். பிள்ளை நன்றான இயங்கக் கூடிய வயது சிறு காலப்பகுதியாகும். இக்காலத்தில் அதிகம் இயங்குவதன் மூலம் இரத்த நலங்கள் விரிவடைந்து இரத்த ஓட்டம் சீராக அமைவதற்கு காரணமாவதுடன் சுவாச சுற்றௌட்டமும் சீராக வேலைசெய்வதற்கு பிள்ளைகளது உடலியக்கம் தான் காரணமாக அமைகின்றது. அதே நேரம் மனவெழுச்சி விருத்திக்கான வழிகள் சரியாக அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும். இவற்றுக்காக வேண்டி சிறுவர் பிராயத்தில் முறைசார்ந்த முறை சாராத கல்வி வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
இக்காலத்தில் இவர்களுக்கு விஷேடமாக உடலின் பருமன், தராதரம், பண்பு என்பவற்றின் வரிசையான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவை ஒரு ஒழுங்கில் வரிசையான ஏற்படுகின்றன. இங்கு ஆண்பிள்ளைகள் உயரத்தில் கூடியவர்களாகவூம் பெண்பிள்ளைகள் அகன்ற தன்மையையூம் பெறுகின்றனர். அதேபோன்று இந்த காலத்தில் சிறுவர்களது உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் பல் காரணிகளை கண்டு கொள்ள முடியூம். அவற்றில் போதிய ஊட்டச்சத்துக்கள் அற்ற உணவூ இவர்களது வளர்ச்சியில் விகாரங்களை ஏற்படுத்துகின்றன. குறைவான நிறையினால் அந்த வயதுக்குறிய வளர்ச்சியை பெறமுடியாது போகின்றதுடன் போசாக்கின்மை நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்த நோய்களினால் சிறுவர்களது உடல் பலவீனமாவதுடன் ஆளுமை குன்றிவிடுகின்றன.
diploma_in_education_Tamil
இந்த காலத்தில் மனித மூலையின் 80 வீதம் வளர்ச்சியடையக் கூடிய காலமாகும். இங்கு அறிவூ என்கின்ற அம்சம் மிகவூம் பிரதானமாகதாகும். இந்த அறிவூ என்பது உள்ளார்ந்த செயற்பாடாகும். இதனால் மனிதன் தெரிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறுகின்றான், நினைவூ கூர்தல், விளங்கிக் கொள்ளுதல், தொடர்பு காணுதல், வகுத்துப் பார்த்தல், தொகுத்தாராய்தல், கற்பனை செய்தல், பிரச்சினைகளை தீர்த்தல், பல்வேறு ஆக்கச் செயல்களை செய்தல் என அவனது அறிவூ விரிந்து செல்லும் காலமாகும். இதன் போது அவனிடத்தில் அறிவூ அல்லது உள விருத்தி என்கின்ற அம்சம் சரியாக வளங்கப்பட்டிருக்க வேண்டும். பியாஜேயூம் இக்ககாலத்தின் சிறுவர்களின் அறிவூ வளர்ச்சி குறித்து நான்கு நிலைகளை சுட்டிக் காட்டுகின்றார்.
சிறுவர்களின் ஆரம்ப காலங்களிலே மொழி ஆற்றல் துரிதமாக வளர்ச்சியடையக் கூடியதாகக் காணப்படுகின்றது. இந்த ஆற்றலை வளர்த்துக் கொள்வதற்குறிய சிறந்த சூழல் அவர்களுக்குக் கிடைக்கும் போது மொழிஆற்றலை தாமாகவே பெற்றுக் கொள்வார்கள். இதற்கு இவர்களின் வீடுகளில் நிகழும் தொடர்பாடல் மிகவூம் முக்கியமானதாகும். அதே போன்று வயது வளர பாடசாலைகளில், தொடர்பாடல் ஊடகங்களின் செல்வாக்கினாலும் அவர்களிடம் மொழி ஆற்றல் மேலும் வளர்வதற்கு அது காரணமாகின்றது.
எனவே சிறுவர்கள் என்பவர்கள் அவர்கள் வேகமான வளர்ச்சி கொண்டவர்கள். அவர்களது வளர்ச்சிக்கு ஏற்ப அவர்கள் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பர். இதனை பெரியவர்கள் கட்டுப்பாடுகள் இட்டு தடுக்க முறியடிக்க முயலக்கூடாது. பிள்ளைகளது ஆக்கத்திறன் விருத்தி, ஆளுமை விருத்தி, விளையாட்டு, ஓய்வூ என்கின்ற அனைத்தையூம் அப்பிள்ளை பெற்றுக்கொள்வதே வளர்ச்சியாகும்.
இக்காலம் பெரியவர்களை காட்டிலும் சிறுவர்கள் என்கின்ற வயதியருக்கே உரித்தானதாகும் என்பது இங்கு பேசப்பட்ட விடயங்களில் இருந்து மிகத் தௌpவாக் அறிந்து கொள்ளமுடிகின்றது.

No comments:

Post a Comment