Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Wednesday, December 12, 2012

1948 – 1977 காலப்பகுதியில் உயர் கல்வி, ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிர்வாகம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள்

diploma_in_education_ Tamil

    இலங்கை சுதந்திரத்துக்கு முன்னர் இடைநிலைக்குப் பிற்பட்ட கல்வித்துறையில் ஓரளவூக்கு முன்னேற்றம் காணப்பட்டிருந்ததெனினும், 1948ல் இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னரே போதியளவான, உண்மையான கல்விக்கோரிககைகள் விடுக்கப்பட்டதனை அவதானிக் முடிகின்றது. சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டின் அனைத்துத் துறைக்கும் நாட்டு மக்களையே நம்பியிருக்க வேண்டி எற்பட்டதாலும். பல்துறை நிபுணர்களை உருவாக்கவேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டது. என்றாலும் இதனை பல்கலைக்கழகத்தால மட்டும் நிறைவூ செய்ய முடியாத நிலை தோன்றவே அதனை ஈடுசெய்வதற்கு பல்வேறு வகையான கல்வி வழங்கள்களின் தேவைதோன்றியது இதன் போது உயர் கல்வியோடு ஆசிரியர் கல்வி மற்றும் கல்வி நிறுவாகம் மற்றும் தொழில்னுட்பக் கல்வி போன்றன வளர்ச்சியடைந்தது.
உயர் கல்வி என்பது 1942ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஆரம்பித்தது முதல் அதன் வளர்ச்சி தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளது. இந்த வகையில் 1950இல் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை கல்வி, விஞ்ஞானம், மருத்துவம், சட்டம்,  விவசாயம்,  மிருக வைத்தியம் என்றும் ஆறு பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 1952இல் கலைத்துறை மற்றும் கீலைத்தேய கல்வித்துறை என்பன மாத்திரமே பேராதனை பல்கலையில் இருந்தது பின்னர் 1961இல் விஞ்ஞான பீடமும் அடுத்து மருத்துவ பீடமும் ஆரம்பிக்கப்பட்டன.
1960இன் பின்னர் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளிலும் பயில்வதற்காக கலைப்பீடத்துக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். 1958இன் பின்னர் வித்தியோதயஇ வித்தியாலங்காரப் பிரிவினைகளுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டது. தேவையூம் அழுத்தமும் அதிகரித்தன் காரணமாக 1962இல் கொழும்பில் இரண்டாவது கலைப்பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.  இதனை அடுத்து கொழும்பு பல்கலைக்கழகம் தன்னாட்சியூள்ள பல்கலையாக உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து 1966 களின் பின்னர் பல்கலைக்கழகத்துக்கு மாணவர்கள் சேர்க்கும் அளவில் வரம்பு அமைக்கப்பட்டது அதிகமாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு சேர்வதில் தடை ஏற்படுத்தப்பட்ட போட்டிநிலை உருவாக்கப்பட்டது.
1971இல் ஜயரட்ன குழுவினது சிபாரிசுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களினது கணிப்பு நிலையை ஏற்றத்தாழ்வில்லாத நிலையை ஏற்படுத்தியதுடன் 1972இல் ஒரு துணைவேந்தரையூம் மேல்நிலை ஆட்சிக்குழுவையூம் ஏற்படுத்தி அதன் மூலம் அது நிர்வகிக்கப்பட்டது. அதேபோன்று பல்கழைக்கலைத் திட்டத்தில் வேலை மற்றும் தொழில் சார்பான கற்கை நெறிகள் புகுத்தப்பட்டன. அத்துடன் காலி. யாழ்பாணம், கண்டி, தெகிவளை ஆகிய இடங்களில் பல்தொழிநுட்பக் கல்வி நிலையங்கள் தொடங்கப்பட்டன. ஆவற்றில் மூன்றாம் நிலை கல்வி நெறிகளும், தொழிற் பயிற்சி நெறிகளும் புகுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த பயிற்சி நிலையங்கள் கனி~;ட பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்தப்பட்டன. இந்த வகையில் காலத்துக்குக் காலம் உயர் கல்விதுறை பல்வேறு மாற்றங்களுக்கும் உற்பட்டு வந்துள்ளதனை அவதானிக்க முடிகின்றது.
அதேபோன்று ஒரு சமூகத்தின், நாட்டின் முதுகெழும்பாக இருக்கும் ஆசிரியர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளது. இந்த மாற்றம் கட்டாயம் நிகழவேண்டிய ஒன்றாகும் ஏனெனில் கல்வி கொள்கை வகுப்பாளர்கள் எத்தகைய கொள்கைகயை வகுத்த போதும் அதனை நடைமுறைப்படுத்துபவர்கள் ஆசிரியர்களாக இருப்பவர்களே.
இந்த வகையில் 1947 கன்னங்கர சீர்திருத்தங்கள் காரணமாக கல்வி முறைமை விரிவடைந்து முக்கிய பாடங்களின் ஆசிரியர்களுக்கான தேவை அதிகரித்தது. இதனால் இத்தகைய ஆசிரியர்களுக்கான விஷேட கல்வி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன 1953 விஞ்ஞHனத்துக்கும், 1954 இல் கணிதத்துக்கும், 1955இல் தொழிற்பாடங்களும், 1956இல் ஆங்கிளத்துக்கும் என்று பல் பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டன. 1958 முதல் ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறிகளில் சேர்வதற்கான தகைமைகள் உயர்த்தப்பட்டன. இதன் போது ஆசிரியர்களுக்கு முழுச் சம்பளத்துடனும், லீவூடனும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
1953இ 1954 களில் கொழும்புத்திட்டத்தின் உதவிகளைப் பெற்று கைப்பணித்துறையில் பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் நியூஸிலாந்துக்கு அனுப்பி பயிற்சி அளிக்கப்பட்டனர். 1957 களில் நஃபீல்ட் கருத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு அதனுடாக பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வழங்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
1960ஆம் ஆண்டிலிருந்து மதப்பிரிவினர் நடாத்திய உதவி பெறும் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளை விஷேட சட்டத்தின் மூலம் அரசு பொறுப்பேற்றது முக்கிய ஒரு நிகழ்வாகும். தேசிய கல்வி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு இணங்க வித்தியோதய வித்தியலங்கார மற்றும் பல்கலைக்கழகங்களிடம் ஆசிரியர் பயிற்சி பொறுப்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தொழிலுக்குறிய முன்பயிற்சி வழங்குவதற்காக பேராதனையில் உள்ள இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்விமானி கற்கை நெறி ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்படும் பயிற்சி நெறிகள், கல்விக் கல்லூரிகள் என்பவற்றை ஆராய்ந்து அதனது குறைநிறைகளை கவனிக்க வேண்டி ஏற்பட்டதன் விளைவாக 1965இல் ஆசிரியர் கல்விக் கல்லூரிகளின் கட்டமைப்பு, பயிற்சி வழங்கும் முறைஇ நுழைவூத்தகைமை என்பவற்றை ஆராயூம் பொறுட்டு விஷேட குழு ஒன்று இஸ்தாபிக்கப்பட்டது. 1945இல் 25501 ஆக இருந்த ஆசிரியர் எண்ணிககை 1975 ஆகும் போது 104043ஆக அதிகரித்தது. இவ்வாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோது இக்கல்விக் கல்லூரிகள் போதாமை காரணமாக கல்விக் கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டன.
1967களில் ஆசிரியர்களில் 57 சதவீதத்தினர் எத்தகைய பயிற்சிகளையூம் பெறாதவர்களாகவே இருந்தனர். இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு கல்விப்பணியின் நிர்வாக பகுதிகளை நிறைவேற்ற 1966இல் கல்வி அமைச்;சில் கல்விப்பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் 1972 ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்காக கல்விக்கல்லூரிகளின் துணையூடன் தபால் மூலம் பயிற்சித் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த பயிற்சி நெறி ஏற்பனவே இலங்கைப் பல்கலையால் பட்டதாரி ஆசிரியர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 1975இல் ஆசிரியர்களுக்கு கல்வி வழங்கும் நோக்கில் பேராதனை, வித்தியாலங்கார, வித்தியோதயஇ,கொழும்புப் பல்கலை வளாகங்களில் உள்ள கல்வித்துறைகளை இணைத்து கல்விப்பீடம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கல்விமாணி தொடக்கம் கலாநிதிப்பட்டம் வரையான பயிற்சி நெறிகளை அது வழங்கியது.
1975களின் பின்னர் நுண்கற்பித்தல்இ அணிமுறை கற்பித்தல், பாவனை நடிப்பு, புதிய எண்ணக்கரு கற்பித்தல் போன்ற பல கற்பித்தற் பரிசோதனைகளாக ஆசிரியர் பயிற்சி மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டன. இங்கு 13 பாடத்துறைகள் சிறப்பு தேர்ச்சிக்காக இணைக்கப்பட்டன.
இன்று வரையூம் மிகவூம் சிறப்பாக ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை பல ஆசிரியர் பயிற்சி பாசறைகள் வழங்கிவருவதுடன். தேசிய கல்வி நிறுவகத்தின் வழிகாட்டலில் டிப்ளோமா பயிற்சி நெறிகள் ஆரம்பிக்ப்பட்டுள்ளன. அதே போன்று இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் மூலம் இன்னும் சிறப்பாக நவீனமயப்படுத்தப்பட்ட முறையில் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறிகளை இவை வழங்கி ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக வழிவகைகளை செய்துவருகின்றது.
இவ்வாறன பல மாற்றங்கள் பல்வேறு துறைகளில் நிகழ்ந்து வருகின்ற வேலையில் கல்வி நிறுவாகத் துறையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆரம்பமாக பாடசாலைகளினதும் ஆசிரியர்களினதும் அதுசார்ந்த ஏனைய விடயங்களினதும் தேவை, எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாகவூம் 1960களில் உதவி பெறும் பாடசாலைகளையூம் தன்னுடன் அரசு இணைத்துக் கொண்டதன் காரணமாகவூம் கல்வித்துறைக்கு சுமை அதிகரித்தது தனியாக நின்று முழுவதனையூம் கவனிப்பது அசாத்தியமாகியது. இதன் விளைவாக நிர்வாகம் பரவளாக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டது. இதனைய கல்வி நிறுவாகம் என்கின்றௌம்.
1961 முதலாவது நிர்வாகப் பரவலாக்கல் மாநாடு பண்டாரவலையில் ஏற்பாடுசெய்யப்பட்டதன் விளைவாக அதே வருடம் ஒக்டோபர் மாதம் நிர்வாகப் பரவலாக்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் போது 10 பிராந்தியங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலும் அவற்றுக்குட்பட்ட 13 பிரதேசங்கள் கல்வி அதிகாரிகளின் நிருவாகத்தின் கட்டுப்பாட்டிலும் அமைக்கப்பட்டன.
1966இல் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் கல்வி அமைச்சு அடுத்து பிரதி கல்வி அமைச்சர் அடுத்து கல்வி செயலாளரும் பணிப்பாளரும் அதனை அடுத்து பிதிப் பணிப்பாளர்கள் அடுத்து ஆரம்பஇ இடைநிலை, தொழிநுட்ப கல்வித் துறைகள் என்ற வழிமுறை அமைக்கப்பட்டது. 1967இல் 14 ஆக இருந்து கல்வி பிரந்தியத் திணைக்களங்கள் 15 ஆக உயர்ந்தது. இது 1971 ஆகும் போது 24ஆக அதிகரித்தது.
முகாமைத்துவ மறுசீரமைப்புக் குழு பாடசாலைமட்ட, முகாமைத்துவ நிருவாக முறைமை போன்றவற்றை மேம்படுத்துவதற்காக தனது பரிந்துரைகளை முன்வைத்தது. தேசிய கல்வி நிறுவகம் கலைத்திட்ட மேம்பாட்டில் கவனம் செலுத்தியதுடன், பயிற்றுவிப்பதிலும் தொடர்புபட்டிருந்தது. பொது நிர்வாக ஆணைக்குழு போன்று கல்வி சேவைக்குழு ஒன்றும் முகாமைத்துவ தரமேம்பாட்டை ஏற்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு கல்வி வயய அலுவலகமும் கல்வி நிருவாகம்இ கல்வி அபிவிருத்தி, பொது நிர்வாகம், நிதி, பாடசாலை செயற்பாடுகள் என 5 பிரிவூகளைக் கொண்டதாக  உருவாக்கப்பட்டதுடன் பிராந்தியப் பணிப்பாளர் அப்பிரதேசத்தின் கல்வி விருத்தி முகாமைத்துவத்தற்கு பொறுப்பாக காணப்பட்டார். இவ்வாறாக பல மாற்றங்கள் காலத்துக்குக் காலம் ஏற்பட்டு வளர்ச்சியடைந்து வந்துள்ளது.

2 comments: