Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Wednesday, December 12, 2012

அரசாங்கசபை காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கல்விச் சீர்திருத்தங்கள் சுருக்க விளக்கம்

diploma_in_education_ Tamil

     இலங்கையை ஆண்டுவந்த கடைசி ஐரோப்பியர்களான பிரித்தானியரின் ஆயுற்காலம் முடிவடைந்து வருகின்ற காலத்தில் இலங்கை ஓரளவுக்கு இறைமை பெறத்தக்க அரசுரிமை நாடு என்னும் அந்தஸ்து 1931இல் கிடைத்தது. இதனால் சட்டமாக்கும் அதிகாரம் அதனை நிறைவேற்றும் கடமையும் அரச சபைக்கு வாய்த்தது. அதனைப் பயன்படுத்தி திரு. கன்னங்கர அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கல்வி பற்றிய சட்டங்களை இயற்றி வந்தது. இந்த அடிப்படையில்,
ஆரம்பத்தில் கல்வி அமைச்சர் தலைமையில் நிறைவேற்றுக் கல்விக் குழுவூக்கு இணையானதாக ஆளுனருக்குப் பொறுப்பான பிரதம நிறைவேற்று அதிகாரியான கல்விப் பணிப்பாளர் இருந்தார். இவை இரண்டும் இணைந்து செல்லாத நிலை காணப்பட்டது. இதில் திருப்தி கொள்ளாததால் 1939 ஆம் ஆண்டு கல்வி பற்றிய கட்டளைச் சட்டம் இந்த முரண்பாடுகளைத் தீர்க்க உதவியாக அமைந்தது. இதன் மூலம் கல்விப் பணிப்பாளர் ஆளுநருக்குக் கீழ்ப்பட்டவராக அல்லாமல் அமைச்சருக்கும் நிறைவேற்றுக் குழுவூக்கும் கீழ்ப்பட்டவராகவே செயற்படவேண்டும் என்ற நியதியை அது வகுத்தது.
அத்துடன் இச்சட்டம் கட்டாய கல்வி வயதெல்லை ஒன்றை நியமித்து 6 வயது முதல் 14 வயது வரையான பிள்ளைகளை இதன் மூலம் கட்டாயம் பாடசாலை செல்லவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தது. இந்த 1939 கட்டளைச் சட்டம் தொடக்கம் மக்கள் பிரதிநிதிகளில் இருந்தே கல்வி அமைச்சரும் ஆளுநர் நியமித்த பணிப்பாளரும் கல்விச்சபைக்கு வழங்கப்பட்ட மேற்பட்ட அதிகாரம் சுயமாக செயற்பட வழிசெய்தது.
அதனைத் தொடர்ந்து 1943இல் கல்வி பற்றிய சிறப்புக் குழு சில விதர்ப்புரைகள் முன்வைத்தது. இது 1865ல் மோர்கன் குழுவூக்கும் 1931ல் அரசியல் மாற்றங்கள் என்பவற்றின் பின்னர் இலங்கை கல்வி முறைபற்றிய ஆய்வை மேற்கொண்ட குழு இந்த சிறப்புக் குழுவாகும். இக்குழு முக்கியமான பின்வரும் பிரச்சினைகளை ஆய்வூக்குற்படுத்தியது
1. சுதேச மொழிக்கல்வி பயின்ற குழுக்களின் சமூக பாதிப்புகள்
2. கல்வியில் சமவாய்ப்பு இல்லாமல் பணம் செலவிட முடியூமான ஆற்றலே அவ்வாய்ப்பை தீர்மானித்து.
3. கட்டாயக் கல்வி நிலை.
4. தேர்வூகளின் ஆதிக்கம்.
துபோன்ற பிரச்சினைகளை ஆய்வூக்குற்படுத்தி அதற்கு பல தீர்வூகளை இந்த விதர்ப்புக்குழு முன்வைத்து இதில்,
பாடசாலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல் இதனால் முதக்குழுக்களின் உதவிபெறும் பாடசாலைகள் அரச பாடசாலைகள் ஒருங்கே செயற்பட வழிசெய்தல் என்றாலும் மதபாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு சில நிபந்தனைகளை உருவாக்கின.
பாடசாலைகளில் சமயம் போதிக்கப்படல் தொடர்பான விடயத்தில் ஒரு சமயத்தை ஏற்காதவர்களுக்கு அந்த சமயப் போதனை வழங்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்தல். அரச பாடசாலைகளின் சமயசார்பின்மை மாறி அங்கும் மதப் போதனைகள் நடைபெறயாயிற்று.
பாடசாலைகளில் கற்பித்தல் ஊடக மொழி விடயத்தில் தாய் மொழியே பிரதான கற்பித்தல் மொழியாக இருக்க வேண்டும் என்று இது தீர்மானித்தது. தொடக்க நிலை பாடசாலைகளில் மொழி விருப்பத்துக்குறியதாக அமைத்தது. அதே நேரம் ஆரம்பப் பள்ளி தொடக்கம் பல்கலைக்கழகம் வரை கல்வி இலசவமாக்கப்பட வேண்டும் என்று கூறியதுடன் உதவி பெறும் பாடசாலைகளும் இத்திட்டத்தில் இணைந்துகொள் முடியூம் என்றும் கூறியது. இவற்றுக்கு தகுதியூள்ள ஆசிரியர்களை அரசு வழங்குவதுடன் அவர்களுக்கு சம்பளத்தையூம் அரசே வழங்க முடிவாகியது. அதே சமயம் பாடசாலைகளுக்கு எந்த கட்டணங்களையூம் பெறமுடியாது வசதிக்கட்டணம் தவிர. வறிய மாணவர்களுக்கு விடுதி வசதி உணவூ வசதிகளையூம் வழங்க விதர்ப்புரைக்குழு தீர்மானம் செய்தது.
அதேபோன்று பாடசாலை ஒழுங்கமைப்புகளையூம் விதர்ப்புரைக்குழு அமைத்தது. இங்கு இடைநிலைப் பாடசாலைகளை பல்சீரமைப்பு கொண்டதாக ஒழுங்குபடுத்த ஆலோசனை வழங்கியது. இதனூடாக தாய் மொழியை பயிற்று மொழிகாக் கொண்ட அனைத்து பாடசாலைகளிளும் கலைத்திட்டம் பொதுவானதாக பின்பற்றப்பட அறிவூறுத்தியது.
அதேநேரம் குறிப்பிட்ட வயதில் தாய்மொழிஇ எண்கணிதம் பொதுவிவேகம் ஆகிய பாடங்களில் பரீட்சை நடாத்தி அதன் புள்ளிகளுக்கு ஏற்ப மூன்று வகையான கற்கைகளுக்கு தெரிவூ செய்யப்படுவர். இதில் உயர் 5 சதவிதத்தினர் பல்கலைக்கழகம் புகும் வரை கல்வி கற்பிக்கப்படுவர். அடுத் 15 சதவீதத்தினர் சிரேஷ்ட பாடசாலைகளில் வணிகம் தொழில் முறைக் கல்வி என்பவற்றைக் கற்பர். மீதமுள்ளோர் தொழிற் பயிற்சி பாடசாலைகளில் விவசாயம்இ சிறு வனிகம் போன்ற துறைகளில் கற்பிக்கப்படுவர்.
இந்த வகையில் அரசசபை காலத்தில் உருவாக்கப்பட்ட கல்விக் குழுக்கள் தமது காலத்து பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்காக தீர்வூகளை முன்வைத்த இலங்கையில் சகலருக்குமான கல்வி வாய்பினை ஏற்படுத்திக் கொடுத்து.

No comments:

Post a Comment