Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Friday, April 27, 2012

கல்வி உளவியல் அறிவினைப் பயன்படுத்தப்படுவதினால் ஆசிரியர் ஒருவர் பெறத்தக்க பயன்கள் மூன்றினை விளக்குக.

கல்வி உளவியல் எனப்படுவது கல்வியூம் உளவியலும் இணைந்த ஒரு வார்த்தை மட்டுமள்ள அது ஒரு தனி அலகாக பரினமித்திருக்கின்ற ஒரு நவீன சந்தர்பபமாகும். கல்வி உளவியலின் மையப் புள்ளி மாணவரது நடத்தையாகும். இது குறித்து கருத்துக் கூறும் போது உளவியல் பாடத்தை வகுப்பறைக்கு பொருத்தமாக்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளே கல்வி உளவியலாகும் என கல்வியியலாளர்கள் கருதுவதாகவூம் அதிகமானவர்கள் கல்வி உளவியல் என்பது தனக்கே உரிய கோட்பாடுகளையூம் பரிசோதனை நுற்பங்களையூம் பிரச்சினைகளையூம் தன்னகத்தே கொண்ட ஒரு துறையாகும் என்பதாக எனிடா வூல்பொல்க் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கல்வி உளவியலினால் ஆசிரியர்கள் அதிகமான பயன்களைப் பெறுகின்றனர் உதாரணமாக

1. ஆசிரியர் தம்மைத் தாமே புரிந்து கொள்ளுதல்
2. மாணவரைப் புரிந்து கொள்ளுதல்
3. மாணவரது தனியால் வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல்
4. வகுப்பறை செயற்பாடுகளை சீர் செய்தல்
5. மாணவரது செயல்களை கட்டுப்படுத்துதல்
6. மாணவரை சிறந்த பொருத்தப்பாடடையச் செய்தல்
7. கற்றல் கற்பித்தலின் போது வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல் என பலவற்றைக் குறிப்பிடலாம்.
ஆரம்ப காலங்களில் கற்பித்தல் என்பது ஆசிரியரது பொறுப்பாக இருந்ததுடன் சம்பிரதாயங்கள் பாரம்பரிய விடயங்களுமே முக்கியம் பெற்றன. இன்று கல்வி உளவியலின் தாக்கம் அதிகமானதாலும் பாரம்பரிய முறைகள் தோழ்வியைத் தழுவியதனாலும் மனிதன் புதிய கோணங்களில் சிந்திக்க தலைப்பட்டான் அப்போது ஆசிரியன் தன்னை புரிந்த கொள்ள முற்பட்டான். அந்த புரிந்து கொள்ளலின் விளைவாக பிரதான 3 கோணங்களின் பார்வை விரந்தது
அ. கற்றல் நோக்கங்களை வரையறுத்தல்
ஆ. கற்றல் அனுபவங்களை ஒழுங்கமைக்கும் செயல்கள்
இ. கற்றல் விளைவூகளை மதிப்பிடும் செயல்கள்
ஏன மூன்றாக வகைப்படுத்தினர். இதனால் ஆசிரியர் ஆனவர் மாணவர்களை எத்தகைய நடத்தை எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு வழிநடாத்துவது என்ற அறிவினை அவர் பெறுகின்றார். அத்துடன் மாணவரது பல்வேறு துறைகளில் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எத்தகைய மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்துவது? ஏன்ற விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியூம்.
அத்துடன் கற்பவரின் வயது மட்டம்இ வளர்ச்சிக் கட்டம்இ விN~ட பண்புகள் என்பன குறித்து ஆசிரியர் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுகின்றதுடன்  பல்வேறு உத்திகள்இ ஊக்கள்கல் போன்றவற்றையூம் அதனூடாக ஆசிரியர் - மாணவர் மற்றும் மாணவர் - மாணவர் தொடர்புகளை சீராக்கவூம் அவர் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது. 
கற்பித்த விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.  எதனை மதிப்பிட வேண்டும் எப்படி மதிப்பிட வேண்டும். அவ்வாறே பிரச்சினைகளை எதிரிகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பின்னூட்டல்கள் வழங்கவேண்டி ஏற்படுகின்றது.  இந்த இடத்தில் ஆசிரியருக்கு கல்வி உளவியல் துணை புரிகின்றது.


உசாத்துணைகள்:


1.            யோ. பெனடிக் பாலன் - கல்வி உளவியலின அடிப்படைகள் - மதுறை - 1996
2.            மணியம் சிவகுமார் - அடிப்படை உளவியல் - சேமமடு – 2009
3.            முத்துலிங்கும் . - கல்வியூம் உளவியலும் - சேமமடு - 2010
4.            Anita E. Woolfolk - Education Psychology –Ohio USA+ 1993

4 comments:

  1. கல்வி உளவியல் அறிவினைப் பயன்படுத்தப்படுவதினால் ஆசிரியர் ஒருவர் பெறத்தக்க பயன்கள் மூன்றினை விளக்குக.

    ReplyDelete
  2. உளவியல் தகவல்கள் சிறப்பாக உள்ளது

    ReplyDelete
  3. தெளிவான விளக்கங்கள்.

    ReplyDelete