Pages

Practice is the best of all instructors - Publilius Syrus Whatever is good to know is difficult to learn - Greek Proverb

Saturday, May 19, 2012

விகொட்ஸ்கியின் கொள்கைக் கேற்ப பிள்ளைகளின் அறிவாற்றல் விருத்தியில் ஆசிரியரின் வகிபங்கு யாது?


இவரைப் பொருத்தவரை ஒரு பிள்ளையினது அறிவாற்றல் விருத்தியில் பெற்றார்கள், பெரியவர்கள், சமவயதினர் போன்றௌரில் ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்பினார் ஏற்படும் இடைத்தாக்கத்தின் முக்கியத்துவத்தினை சுட்டிக்காட்டுகின்றார்.

இது குறித்து விகொட்ஸ்கி குறிப்பிடும் போது "பிள்ளையானது தான் அன்றாடம் காணும் கருத்துக்கள் நிகழ்வூகளினால் தனக்குறிய எண்ணக்கருக்களை உருவாக்கிக் கொள்கின்றது" ஏன்வே அங்கு அந்த குழந்தை காணும் அனுபவிக்கும நிகழ்வூ நல்லதாக இருப்பின் நல்ல எண்ணக்கருக்களும் தீயதாக இருப்பின் தீய எண்ணக்கருக்களும் ஏற்படுகின்றன. எனவே பாடசாலையைப் பொருத்தவரை ஆசிரியர்கள் முக்கியமான பாத்திரமாக இருக்கின்றனர். ஆவர்களை பிள்ளைகள் பின்பற்றுகிறனர்.

அதேவேலை தான் பாடசாலையில் காணும் பெரியவர்களான ஆசிரியர்கள் பற்றிய உணர்வூகளை வளர்த்துக் கொள்கின்றனர். இது நாளடைவில் நடத்தையாக மாறுகின்றது. ஆரம்பத்தில் பிள்ளைகளிடம் குழு செயற்;பாடுகளில் ஈடுபடும் மன ஊக்கள் காணப்படுவதில்லை. எனினும் ஆசிரியர் மாணவர் இடைத்தொடர்பினால் அந்த தாக்கத்தைப் பெறுகின்றனர்.

ஆசிரியரின் வகிபங்கு பற்றி கூறும் விகொட்ஸ்கி பிள்ளைகளிடம் அண்மித்த அபிவிருத்தி வளயம் ஒன்று இருப்பதாக்கவூம் மேலும் கூறும்போது அங்கு பிள்ளை பல திறன்களையூம் திறமைகளையூம் வைத்திருக்கின்றது எனினும் அதனை பெற்று தனது வாழ்வில் பயன்படுத்துவது பெரியவர்களின் உதவியின் மூலமே என்கின்றார். இங்கு அன்மித்த அபிவிருத்தி வலயம் என்பது பிள்ளை தானே சுயமான இருந்து தனது ஒரு பிரச்சினைக்கு தீர்வைக்காணுவதைவிடவூம் இன்னொருவர்மூலம் உதவியைப் பெற்று காண்பதுக்கும் இடையிலான வேறுபாடாகும்.

எனவே ஆசிரியரானவர் இங்கு முக்கிய இடம் பெறுகின்றார். பிள்ளை ஒரு ஆசிரியரின் மூலம் அதனை பெற முயல்வது சாதாரன ஒருவரிடம் இருந்து பெறுவதனை விடவூம் அங்கு பாரிய முன்னேற்றமும்இ விருத்தியூம் காணப்படுவதனை காணலாம். அதுவூம் பாடசாலையில் அந்த நிலையில் ஆசிரியரின் வகிபங்கு மிக முக்கியமானதாகும்.

உசாத்துணை
  கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

பியாஜேயினால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் பிள்ளைகளின் அறிகைசார் விருத்தியைப் பாதிக்கும் மூன்று காரணிகளை விளக்குக.


அறிவூசார் விருத்தி என்பது ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து அவனது வளர்ச்சியில் ஏற்படும் சிக்கலான மாற்றங்களுக்கு ஏற்ப உலகம் பற்றிய புலக்காட்சி பரந்தாகவூம் பொதுமையாக்கம் பெற்றதாகவூம் அமைதல்எனக்குறிப்பிடுகின்றார். புpன்னர் இது உயிரியின் புறச்சூழலின் இடைத்தாக்கச் செயல்களினூடாக தன்மயமாக்கப்பட்டு சிக்கல் நிறைந்ததாக மாறுகின்றது. இந்த அறிவூசார் செயல்களில் ஏற்படும் மாற்றங்களாக,

முதிர்ச்சி:
முதிர்ச்சி என்று அழைக்கக் கூடிய குறிப்பிடத்தக்க உடலியல் வளர்ச்சியே அனைத்துவிதமான விருத்தியோடு தொடர்புடைய மாற்றங்களுக்குத் தேவையான உயிரியல் அடிப்படைகளை வழங்குகின்றது. குழந்தை நிலையில் இருந்த அந்த உயிர் படிப்படியாக வளரும் போது தன்னில் பல மாற்றங்களை கொண்டுவருகின்றது. அதன போது குழந்தை நாளடைவில் நடக்கக் கற்றுக் கொள்கின்றது நடத்தல் மூலம் ஒரு விடயத்தை அவசரமாக செய்து கொள்ள முடியாது என்று காணும் குழந்தை ஓடக் கற்றுக் கொள்கின்றது.

செயற்பாடு:
குழந்தைகளை பொருத்தவரை அவர்கள் எப்போதும் அதிகமாக செயற்பட்டுக் கொண்டே இருப்பவர்கள். இதனால் தான் அவர்கள் அதிகமான விடயங்களை குறுகிய காலத்தில் கற்றுக் கொள்கின்றனர். பெரியவர்களை பொருத்தவரை அவர்கள் புதிய விடயங்களில் அல்லது புதிய உபகரணங்களை கையால்வதில் ஈடுபாடு காட்டுவதில்லை ஆனால் குழந்தைகள் அந்த விடயங்களில் கூடுதலான ஈடுபாடு காட்டுவதால் அவர்கள் நவீனத்துவத்துடன் வேகமாக இணைந்து கொள்கின்றதனை காணலாம்.

சமூக ஊடுகடத்தல்:
குழந்தை பல சந்தர்ப்பங்களில் பலருடன் தொடர்புகொள்கின்றனர் அதன்போது பல்வேறுவகையான சமூக கலாசார விழுமியங்கள் பற்றிய விளக்கத்தை விரிவூபடுத்திக் கொள்வதை காணமுடியூமாகும். குழந்தை பல நவீன விடயங்களை தன்னுள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். தனது உடையமைப்பை மாற்றிக் கொள்கின்றது. தனது நடையூடைகளையூம் மாற்றி அமைத்துக் கொள்கின்றதனை காண்கின்றௌம்.

உசாத்துணைகள்:
      1.    கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

       2.   முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
       3.   வெண்மேகம் இணையத்தளம்

கட்டிளம் பருவத்தினால் எதிர்கொள்ளப்படும் உளவியல் பிரச்சினைகள் மூன்றினை ஆராய்க.

இப்பருவம் குழந்தைப்பருவத்துக்கும், வளர்ந்தோர் பருவத்துக்கும் இடைப்பட்ட மாறுநிலைப்பருவமாகும். இதனால் சில வேளைகளில் இவ்விரு பருவ இயல்புகளும் ஒருங்கே காணப்படலாம். 12-20 வயது வரையான காலம் இப்பருவத்தினுள் அடங்கும். ஆண், பெண் இரு பாலாரிடமும் உயிரியல் ரீதியிலும் நடத்தை ரீதியிலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பருவம் இதுவாகும். இதனால் பல உளவியல் பிரச்சினைகள் தோன்றுகின்றன.

துரித உடல் வளர்ச்சி:
இந்த காலத்தில் ஏற்படும் வளர்ச்சி காரணமாக அவர்களிடையே அமைதியின்மை ஏற்படுகின்றன. அத்துடன் இந்த வளர்ச்சி ஆளுக்காள் வித்தியாசமாக அமைவதும் ஒருகாரணமாகும். சிலரது உடல் பருத்து காணப்படும், முகம் மார்பு கமுக்கட்டு பேன்ற வற்றில் மயிர்கள் முலைக்க ஆரம்பித்தல், குரல் விரிவடைந்து குரலில் மாற்றம் எற்படும் இது போன்றவை இவர்களுக்கு ஷ்டத்தை எற்படுத்தும், தனது அனுபவங்களை பகிர்ந்த கொள்ள முடியாத நிலை தோன்றும். இதனை பழக்கப்படுத்திக் கொள்ள நீண்ட நாட்கள் எடுக்கும்.

சுதந்திர உணர்வு:
இந்நிலைமைகளில் தீர்மானம் எடுத்தல், சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளைகள், தம்மை சமூகத்தின் முழுமையான உறுப்பினராக நோக்குவர். இப்பருவத்தினரை சமூகம் நோக்கும் முறையூம் பல சந்தர்ப்பங்களில் முரண்பாடாக காணப்படுவதால் பிரச்சினைகள் ஏற்படலாம். வளர்ந்தோரின் காட்டுப்பாட்டில் இருந்த நீங்கி நிற்கவே முற்படுவர். இதனால் பெற்றௌரைப் புறக்காணிக்க முற்படடுவர். இந்த நிலையினால் குற்றச் செயல்கள், வன்செயல்களில் ஈடுபட முற்படுவர். ஆவமானங்களை தாங்க மாட்டார்கள் இதனால் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடவும் செய்வார்கள்.

கனவு காணுதல்:
எதிர்பால் கவர்ச்சியால் அவர்களுடன் இணைந்த செயலாற்ற ஆர்வம் கொள்வார்கள்இ காதல் வயப்படுவார்கள் தனது திருமணம் குறித்து சிந்திக்க ஆரம்பிப்பார்கள். கல்வியை கற்பதில் பல இடர்பாடுகளை எதிர்கொள்வார்கள் அதேசமயம் பணம் தேட முற்படுவர் அதற்காக தொழில் தொரிவுகளில் நாட்டம் கொள்வார்கள்.

உசாத்துணைகள்:

   1.      முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
   2.     வெண்மேகம் இணையத்தளம்
 3.  கல்வி உளவியல் - இலங்கை திறந்த பல்கலைக்கழகம்

பிள்ளையின் வளர்ச்சியையும் விருத்தியையும் பாதிக்கும் இரு பிரதான காரணிகனை உதாரணங்களுடன் சுருக்கமாக விளக்குக.

1.            பரம்பரையும் சூழலும்
2.            முதிர்ச்சியும் கற்றலும்

ஒரு குழந்தை பிறக்கும் போது பெற்றாரிடமிருந்து பெறுகின்ற இயல்புகளை பரம்பரைக் காரணிகள் எனக்குறிப்பிடலாம். இந்த காரணிகள் அவரது முழுவாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தக் கூடியதாகவூம் இருக்கின்றனஉதாரணமாக
1.            தனிப்பட்டவர்களின் உடல் இலட்சனங்கள்:
இது தோலின் நிறம் கணிகளின் நிறம் மற்றும் உயரம் போன்ற வற்றைத் தீர்மானிக்கின்றன. இதனால்  தான் எமக்கு சிலரைக் காணும்போதே இவர் இந்த மனிதருடைய பிள்ளை அல்லது இந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட முடிகின்றது.
2.            விஷேட ஆற்றல்கள்:
இந்கு நுண்ணறிவு, விவேகம் போன்றவற்றை குறிப்பிட முடியூம். இந்த  விஷேட  ஆற்றல்கள் குற்றக் செயல்களுக்கும் காரணமாகின்றன என்று இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த கோரிங் என்பவர் ஆய்வு செய்து குறிப்பிடுகின்றார்.
3.            உடல் நோய்கள்:
இருதய நோய்கள், நீரிழிவு மற்றும் தோல் நோய்கள் போன்ற பரம்பரைகாணிகளினால் ஏற்படுகின்றன.
4.            குறைபாடுகளும் அங்கவீனங்களும்:
சில அறிஞர்கள் குறிப்பிடும் போது வாக்குக்கண், கூடுதலான விரல்கள் மற்றும் உறுப்புக்கள் கடையாக அல்லது நீளமாக வளர்ந்த காணப்படுவதனையும் குறிப்பிடுவர்.
சூழல்காரணிகள்
                பிள்ளையின் வளர்ச்சியிலும் விருத்தியிலும் பிறப்பிற்கு முன்னராக பின்னரான காரணிகள் தாக்கம் செலுத்துவதாகக் குறிப்பிடுகின்றனர். இங்கு தாயின் மனவெழுச்சி நிலை, போசாக்கு நிலை என்பவற்றுடன்,

1.            வீட்டுடன் தொடர்புடைய காரணிகள்:
பெற்ரது கல்வியறிவு, ஒழுக்கம், அன்பு மற்றும் ஒத்துழைப்பு போன்றனவும்
2.            பாடசாலையுடன் தொடர்புடைய காரணிகள்:
தூரப் பிரதேச பாடசாலைஇ வித்தியாசமான நன்பர்கள்இ புதிய விடயஙூகள், பாரபட்சம் மற்றும் ஓய்வு  நேரத்தை பிரயோசனமாக்க கழிக்க வசதிகள் இன்மை போன்ற காரணிகளைக் குறிப்பிட முடியும்.
3.            சமூகத்துடன் தொடர்புடைய காரணிகள்:
அநீதி, ஊழல், ஒற்றுமையின்மை, இன சாதி பேதங்கள், ஏற்றத்தாழ்வு  மற்றும் மனமுறிவு  போன்ற காரணிகள் வளர்ச்சியிலும் விருத்தியிலும் தாக்கம் செலுத்துகின்றன.

முதிர்ச்சி
உடலுறுக்குக்களில் ஏற்படும் மாற்றததையே நாம் முதிர்ச்சி என்கின்றௌம். ஊளவியளாளர் நடத்தையில் ஏற்படும் மாற்றம் என்று குறிப்பிடுகின்றனர். ஒரு குழந்தை சிரித்தல், தவழுதல், நடத்தை மற்றம் பல் முளைத்தல் என்பன முதிர்ச்சியின் அடையாளங்களாகும்.

ற்றல்
கற்றலானது சூழலில் காணப்படுகின்ற பொருட்கள், உயிரினங்கள் போன்ற இன்ன பலவற்றிலிருந்தும். புலன் உறுப்புக்க@டாக காண்பவை, கேற்பவை, உணர்பவை மற்றும் மணப்பவை போன்ற வற்றினாலும். மூத்தோர்களின் ஏறுதல், பாய்தல், ஓடுதல் மற்றும் நடந்து கொள்ளும் முறை போன்ற முன்மாதிரிகளினூடக என்று பலதரப்பட்ட முறைகளினூடாக குழந்தைகள் கற்கின்றனர்.

உசாத்துணைகள்:

  1.      பாரம்பரையும் சூழலும் - தேசிய கல்வி நிறுவகம் - 1991
  2.      கல்வியியல் கட்டுரைகள் - தேசிய கல்வி நிறுவகம் -2005
  3.      முத்துலிங்கம் எஸ் - கல்வி உளவியல் - யாழ்பாணம் - 1980
  4.      வெண்மேகம் இணையத்தளம்

Friday, April 27, 2012

பிள்ளை நடத்தை முறைகளை விளங்கிக் கொள்வதற்கு உதவூம் பரிசோதனைசார் முறைக்கும் பரிசோதனைசாரா முறைக்கும் இடையிலான மூன்று வேறுபாடுகளை பரிசீலிக்குக.

கற்றல் கற்பித்தல் செயற்பாட்டை வெற்றிகரமாதொரு செயற்பாடாக அமைத்துக் கொள்வதற்கு அல்லது ஆசிரியர் எதிர்பார்த்த நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு ஆசிரியரானவர் மாணவர் குறித்து போதியளவூ அறிந்திருக்க வேண்டும். அந்த அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ மாணவரது நடத்தை பற்றிய அறிவினைப் பெற்றுக்கொள்வதற்கு  உளவியலில் இரண்ட வழிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
1. பரிசோதனை சார் முறை
2. பரிசோதனை சாரா முறை
எனினும் இந்த முறைகளை குறித்து அறியூம்போது அதன் வேறுபாடுகள் மிக முக்கியமானதாகும். அத்தகைய வேறுபாடுகளை அவதானிக்கும் பேHது பின்வருவனவற்றை கருதமுடியூம்.

ஆய்வுகூட முறை பின்பற்றப்படல்.
ஆய்வூகூட முறையில் நடமாகடக் கூடிய உயிரினங்களை வைப்பது என்பது மிகவூம் சிரமமானதாகும். அதுவூம் மனித இனத்தில் மாணவர்களை ஒரு இடத்தில் கட்டுப்படுத்திவைப்பது சாத்தியமற்றகவே காணப்படுகின்றது. இவ்வாறு கட்டுப்படுத்தி வைக்காமல் ஆய்வூகூடப்பரிசோதனைகளை சரியாக செயற்படுத்த முடியாது. மறுபுறம் பரிசோதனை முறை சாராத விடயத்தில் ஆய்வூகூடப் பிரச்சினை எழுவதில்லை அதனால் ஆய்வூ செய்யூம் மாணவனை அவரது இயல்பான நிலையில் வைத்தே ஆய்வூ செய்ய முடிகின்றது.  எனினும் இங்கு அவதானிப்பவர்கள் தங்களது விருப்பு வெறுப்புக்களையூம் சேர்த்துவிடும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது

சரியான பூரணமான தீர்வுகளைப் பெறுவது.
பரிசீலிக்கப்படும் நபர் கட்டுப்படுத்தப்படுவதனால் அவரிடம் இருந்து சரியான முடிவுகளை பெறுவது சாத்தியமற்றதொன்றாகும். இவ்வாறு பெறப்படும் முடிவு நிர்ப்பந்திக்கப்பட்டு எடுக்கப்பட்டதாகவே இருக்கும். சரியான பூரணமான விடயத்தைக் பெறுவதானால் அங்கு இயல்பு நிலை பேனப்படுவது அவசியம் என்பது சர்வதேசம் ஏற்றுக்கொண்ட ஒரு அம்சமாகும். ஆனாலும் மனிதனை ஒரு வரையரைக்குள் கட்டுப்படுத்திவைப்பது சாத்தியமற்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. எனினும் பரிசோதனைசார் முறைமூலம் நன்கு திட்டமிட்ட பரிசோதனைகள் மூலம் காரணகாரிய தொடர்பை இலகுவாக இனங்காணலாம். அதே போன்று பரிசோதனைசார் முறையில் காணப்படும் மிக முக்கியமான விடயம் இந்த முடிவூகளை இன்னொருவர் கூட சரிபார்க்க முடியூமான இருக்கின்றது என்பது.

துல்லிமான முடிவூகளுக்கு ஆய்வூகூடம்.
 ஒரு விடயம் குறித்த முடிகளை துல்லியமாகப் பெறுவது என்றால் அங்கு முழுநேரக் கண்காணிப்பு இருப்பது. ஆத்துடன் இங்கு நேரம் மற்றும் பணம் என்பன சிக்கனப்படுத்தப்படுகின்றன. மீண்டும் மீண்டும் அசதானிக்க முடியூமாக இருப்பது இதன் நம்பிக்கைத்தன்மையை மேலும் அதிகமாக்குகின்றது. அவசியமாகும். இதற்கு பெரிதும் துணைபுரிவது பரிசோதனைசார் ஆய்வூகளாகும். ஏனினும் இதனை பரிசோதனை சாரா முறையில் காணாமுடியாது காரணம் அங்கு ஆய்வூகூடகக்கண்காணிப்பு என்பது இல்லாதாகும். இதனால் பரிசோதனை சாரா முறையில் பெறப்படும் முடிவூகள் பெரும்பாலும் அனுமானங்களாக அல்லது கிட்டிய முடிவூகளாவே தவிர இருக்காது.


உசாத்துணைகள்:


 1.     கல்விச் சஞ்சிகை - தேசிய கல்விக் கழகம் (விஷேட  இதழ்) – 1984
 2.    பாரம்பரையும் சூழலும் - தேசிய கல்வி நிறுவகம் - 1991
 3.     கல்வியியல் கட்டுரைகள் - தேசிய கல்வி நிறுவகம் -2005

கல்வி உளவியல் அறிவினைப் பயன்படுத்தப்படுவதினால் ஆசிரியர் ஒருவர் பெறத்தக்க பயன்கள் மூன்றினை விளக்குக.

கல்வி உளவியல் எனப்படுவது கல்வியூம் உளவியலும் இணைந்த ஒரு வார்த்தை மட்டுமள்ள அது ஒரு தனி அலகாக பரினமித்திருக்கின்ற ஒரு நவீன சந்தர்பபமாகும். கல்வி உளவியலின் மையப் புள்ளி மாணவரது நடத்தையாகும். இது குறித்து கருத்துக் கூறும் போது உளவியல் பாடத்தை வகுப்பறைக்கு பொருத்தமாக்கிக் கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளே கல்வி உளவியலாகும் என கல்வியியலாளர்கள் கருதுவதாகவூம் அதிகமானவர்கள் கல்வி உளவியல் என்பது தனக்கே உரிய கோட்பாடுகளையூம் பரிசோதனை நுற்பங்களையூம் பிரச்சினைகளையூம் தன்னகத்தே கொண்ட ஒரு துறையாகும் என்பதாக எனிடா வூல்பொல்க் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கல்வி உளவியலினால் ஆசிரியர்கள் அதிகமான பயன்களைப் பெறுகின்றனர் உதாரணமாக

1. ஆசிரியர் தம்மைத் தாமே புரிந்து கொள்ளுதல்
2. மாணவரைப் புரிந்து கொள்ளுதல்
3. மாணவரது தனியால் வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல்
4. வகுப்பறை செயற்பாடுகளை சீர் செய்தல்
5. மாணவரது செயல்களை கட்டுப்படுத்துதல்
6. மாணவரை சிறந்த பொருத்தப்பாடடையச் செய்தல்
7. கற்றல் கற்பித்தலின் போது வரும் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ளுதல் என பலவற்றைக் குறிப்பிடலாம்.
ஆரம்ப காலங்களில் கற்பித்தல் என்பது ஆசிரியரது பொறுப்பாக இருந்ததுடன் சம்பிரதாயங்கள் பாரம்பரிய விடயங்களுமே முக்கியம் பெற்றன. இன்று கல்வி உளவியலின் தாக்கம் அதிகமானதாலும் பாரம்பரிய முறைகள் தோழ்வியைத் தழுவியதனாலும் மனிதன் புதிய கோணங்களில் சிந்திக்க தலைப்பட்டான் அப்போது ஆசிரியன் தன்னை புரிந்த கொள்ள முற்பட்டான். அந்த புரிந்து கொள்ளலின் விளைவாக பிரதான 3 கோணங்களின் பார்வை விரந்தது
அ. கற்றல் நோக்கங்களை வரையறுத்தல்
ஆ. கற்றல் அனுபவங்களை ஒழுங்கமைக்கும் செயல்கள்
இ. கற்றல் விளைவூகளை மதிப்பிடும் செயல்கள்
ஏன மூன்றாக வகைப்படுத்தினர். இதனால் ஆசிரியர் ஆனவர் மாணவர்களை எத்தகைய நடத்தை எதிர்பார்ப்புக்களை அடைவதற்கு வழிநடாத்துவது என்ற அறிவினை அவர் பெறுகின்றார். அத்துடன் மாணவரது பல்வேறு துறைகளில் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு எத்தகைய மதிப்பீட்டு முறைகளை பயன்படுத்துவது? ஏன்ற விளக்கங்களை பெற்றுக் கொள்ள முடியூம்.
அத்துடன் கற்பவரின் வயது மட்டம்இ வளர்ச்சிக் கட்டம்இ விN~ட பண்புகள் என்பன குறித்து ஆசிரியர் விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள வழி ஏற்படுகின்றதுடன்  பல்வேறு உத்திகள்இ ஊக்கள்கல் போன்றவற்றையூம் அதனூடாக ஆசிரியர் - மாணவர் மற்றும் மாணவர் - மாணவர் தொடர்புகளை சீராக்கவூம் அவர் தீர்மானங்களை மேற்கொள்ளவேண்டி ஏற்படுகின்றது. 
கற்பித்த விடயங்கள் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.  எதனை மதிப்பிட வேண்டும் எப்படி மதிப்பிட வேண்டும். அவ்வாறே பிரச்சினைகளை எதிரிகொள்ளும் மாணவர்களுக்கு தேவையான பின்னூட்டல்கள் வழங்கவேண்டி ஏற்படுகின்றது.  இந்த இடத்தில் ஆசிரியருக்கு கல்வி உளவியல் துணை புரிகின்றது.


உசாத்துணைகள்:


1.            யோ. பெனடிக் பாலன் - கல்வி உளவியலின அடிப்படைகள் - மதுறை - 1996
2.            மணியம் சிவகுமார் - அடிப்படை உளவியல் - சேமமடு – 2009
3.            முத்துலிங்கும் . - கல்வியூம் உளவியலும் - சேமமடு - 2010
4.            Anita E. Woolfolk - Education Psychology –Ohio USA+ 1993